என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "young man dead"
- வேடசந்தூர் அருகே வாலிபர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்
- இந்த நிலையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே நாக கோணனூரைச் சேர்ந்த பழனிசாமி (வயது 31). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். கையில் கட்டுப்போட்டதால் அன்றாட பணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தொட்டியில் தண்ணீர் எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தவறி உள்ளே விழுந்தார். காயமடைந்ததால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. இதனால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- பிறந்த நாளை கொண்டாட நண்பர்களுடன் பியர் சோலா பகுதிக்குச் சென்ற வாலிபர் 3 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை.
- கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா என்று கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(19). சுற்றுலா வழிகாட்டி யாக வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்குமுன் தனது பிறந்த நாளை கொண்டாட நண்ப ர்களுடன் பியர் சோலா பகுதிக்குச் சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு 3 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் மாயமான தன் மகனை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.
இந்நிலையில் பியர் சோலா பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்ட கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த னர். இதனை யடுத்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை யினர் அங்கு விரைந்து வந்தனர்.
கிணற்றில் கிடந்த வாலி பர் உடலை போராடி மீட்டனர். அது சந்தோஷ்கு மார் என தெரியவந்தது. பிறந்தநாள் கொண்டாடச் சென்ற சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தி ல்கொடை க்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்ப வம் கொடைக்கானல் பகுதி யில் அதிர்ச்சி ஏற்படுத்தியு ள்ளது.
- கம்பம் அருகே குடிப்பழக்கத்தை கண்டித்ததால் என்ஜினீயரிங் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- கம்பம் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம்:
கம்பம் 31-வது வார்டு சி.எம்.எஸ் ேராடு பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சிவபாலன்.
என்ஜினீயரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்த்து வந்தார். மனநிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 2 வருடங்களாக வீட்டிலேயே இருந்துவந்தார். இவருக்கு போதை பழக்கம் இருந்ததால் அதனை குடும்பத்தினர் கண்டித்தனர்.
இதனால் சம்பவத்தன்று தனது அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை, குருங்குளம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் நேற்று நாகப்புடையான் பட்டி பகுதியில் சாலையோரத்தில் தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே ஒரு மோட்டார் சைக்கிள் கிடந்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் குருங்குளம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வல்லம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்குபதிவு செய்து அவர் விபத்தில் இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்