search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young man dead"

    • வேடசந்தூர் அருகே வாலிபர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்
    • இந்த நிலையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே நாக கோணனூரைச் சேர்ந்த பழனிசாமி (வயது 31). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். கையில் கட்டுப்போட்டதால் அன்றாட பணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் தொட்டியில் தண்ணீர் எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தவறி உள்ளே விழுந்தார். காயமடைந்ததால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. இதனால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • பிறந்த நாளை கொண்டாட நண்பர்களுடன் பியர் சோலா பகுதிக்குச் சென்ற வாலிபர் 3 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை.
    • கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா என்று கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(19). சுற்றுலா வழிகாட்டி யாக வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்குமுன் தனது பிறந்த நாளை கொண்டாட நண்ப ர்களுடன் பியர் சோலா பகுதிக்குச் சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு 3 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் மாயமான தன் மகனை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.

    இந்நிலையில் பியர் சோலா பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்ட கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த னர். இதனை யடுத்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை யினர் அங்கு விரைந்து வந்தனர்.

    கிணற்றில் கிடந்த வாலி பர் உடலை போராடி மீட்டனர். அது சந்தோஷ்கு மார் என தெரியவந்தது. பிறந்தநாள் கொண்டாடச் சென்ற சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தி ல்கொடை க்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்ப வம் கொடைக்கானல் பகுதி யில் அதிர்ச்சி ஏற்படுத்தியு ள்ளது.

    • கம்பம் அருகே குடிப்பழக்கத்தை கண்டித்ததால் என்ஜினீயரிங் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • கம்பம் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம்:

    கம்பம் 31-வது வார்டு சி.எம்.எஸ் ேராடு பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சிவபாலன்.

    என்ஜினீயரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்த்து வந்தார். மனநிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 2 வருடங்களாக வீட்டிலேயே இருந்துவந்தார். இவருக்கு போதை பழக்கம் இருந்ததால் அதனை குடும்பத்தினர் கண்டித்தனர்.

    இதனால் சம்பவத்தன்று தனது அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி அருகே இன்று காலை தண்டவாளத்தில் ஒரு ஆணின் பிணம் கிடந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி ஜீயபுரம் - எலமனூர் ரெயில் பாதையில் இன்று காலை தண்டவாளத்தில் ஒரு ஆணின் பிணம் கிடந்தது. இது குறித்து திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் லெட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். அப்போது இறந்த வாலிபர் அந்தநல்லூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த வீரமணி - பாக்கியலெட்சுமி தம்பதியினரின் மகன் சுரேஷ்குமார் (வயது 35) என்பது தெரியவந்தது.

    சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட சுரேஷ்குமார் இன்று காலை அந்த வழியாக சென்ற போது ரெயில் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    சுரேஷ்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். இந்த சம்பவம் ஜீயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தஞ்சை அருகே சாலையோரத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, குருங்குளம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் நேற்று நாகப்புடையான் பட்டி பகுதியில் சாலையோரத்தில் தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே ஒரு மோட்டார் சைக்கிள் கிடந்தது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் குருங்குளம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வல்லம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இதுகுறித்து வழக்குபதிவு செய்து அவர் விபத்தில் இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×