

வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே நாக கோணனூரைச் சேர்ந்த பழனிசாமி (வயது 31). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். கையில் கட்டுப்போட்டதால் அன்றாட பணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தொட்டியில் தண்ணீர் எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தவறி உள்ளே விழுந்தார். காயமடைந்ததால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. இதனால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.