search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UN Council"

    • பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானம் கொண்டு வந்தன.

    நியூயார்க்:

    பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதி அப்துல் ரவூப் அசார். இவர் அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் ஆவார்.

    தீவிரவாதி அப்துல் ரவூப், 1999-ம் ஆண்டு இந்திய விமான கடத்தல். 2001-ம் ஆண்டு இந்திய பாராளுமன்றம் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்டு செயல்படுத்துவதில் ஈடுபட்டார்.

    இந்நிலையில் தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரை பயங்கரவாத தடை பட்டியலில் சேர்க்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தீர்மானம் கொண்டு வந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1267 ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா தடைகள் பட்டியலில் அப்துல் ரவூப்பை சேர்க்க இந்தியா தனது முன் மொழிவை வைத்தது.

    இதற்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானம் கொண்டு வந்தன.

    இதை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் நிறுத்தியது. இதற்கு முன்பும் பல பாகிஸ்தான் தீவிரவாதிக்கு எதிராக தீர்மானங்களை சீனா நிறுத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவுடனான ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகார் குறித்து பிரான்ஸ் அதிபர் மெக்ரானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அப்போது நான் பதவியில் இல்லை என கூறினார். #RafaleDeal #EmmanuelMacron
    நியூயார்க்:

    பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது அதில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

    அதை மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு மறுத்துள்ளது. இந்த நிலையில் ரபேல் விமானங்கள் தயாரிப்பதற்கான உதிரி பாகங்களுக்கான டெண்டரை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க மத்திய அரசு பரிந்துரை செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே தெரிவித்து இருந்தார்.

    அது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால் அது பற்றி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார். இந்த நிலையில் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ள அவர் இடைவெளியின் போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


    அப்போது அவரிடம் ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் புகார் குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர் ‘‘கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி பாரீஸ் வந்த போது ரூ.58 ஆயிரம் கோடி செலவில் 36 ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் போட்டது. இது இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம்.

    இந்த விவகாரத்தில் நான் மிக தெளிவாக இருக்கிறேன். இது 2 நாட்டு அரசுகளுக்கு இடையே விவாதிக்கப்பட்டது. அப்போது நான் அதிபர் பதவியில் இல்லை. கடந்த ஆண்டு மே மாதம் தான் நான் அதிபரானேன். இதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பே தெளிவாக கூறிவிட்டார்.

    இதுகுறித்து வேறு எதுவும் என்னால் கூற முடியாது. ஏனெனில் நான் அப்போது பதவிலும் இல்லை. நாங்கள் மிக தெளிவான சட்ட திட்டங்களுடன் செயல்படுகிறோம்’’ என சுருக்கமாக முடித்துக் கொண்டார். #RafaleModiKaKhel #RafaleDeal #RafaleScam #FrancePresident #EmmanuelMacron
    ×