search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tree Sapling ceremony"

    • போடி அறிவுத்திருக்கோவில் அமைந்துள்ள சாலையில் தி கிரீன் லைப் பவுண்டேசன் சார்பில் செயலாளர் தலைமையிலும், நகர்மன்ற உறுப்பினர் முன்னிலையிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • வேம்பு, வாதாம், சிவகுண்டலம், அதானி, இலுப்பை, நாவல், பூவரசு, குமிழ், வில்வம், பன்னீர் உள்ளிட்ட 18 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அறிவுத்திருக்கோவில் அமைந்துள்ள சாலையில் தி கிரீன் லைப் பவுண்டேசன் சார்பில் செயலாளர்சுந்தரம் தலைமையிலும், நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரி முன்னிலையிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. அறிவுத்திருக்கோவில் நிர்வாகத் தலைவர்சிவராமன் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்.

    சில்லமரத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி வனிதா, ஆடிட்டர் மித்ராதேவி , அறிவுத்திருக்கோவில் செயலாளர் தயாளன், பொருளாளர் சந்திரன், திட்ட அலுவலர்சுகந்தி ,மக்கள் தொடர்பு அலுவலர் சங்கரேஸ்வரி, பசுமை பங்காளர் அமைப்பின் நிறுவனர் பனை முருகன், சீனிவாசா நகர் நலச்சங்க செயலாளர் ரவிச்சந்திரன், ராஜ்மோகன், காஞ்சனா, அனீஷ், சில்லை அஜித்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

    இதில் தி கிரீன் லைப் பவுண்டேசன் உறுப்பினர்கள் சேகர், செந்தில்ராஜ், அர்ச்சுனன்,சந்திரசேகர், ஹரி கிருஷ்ண பாண்டியராஜ், உதயா ரத்தினம் ஆகியோர் களப்பணியில் ஈடுபட்டனர். வேம்பு, வாதாம், சிவகுண்டலம், அதானி, இலுப்பை, நாவல், பூவரசு, குமிழ், வில்வம், பன்னீர் உள்ளிட்ட 18 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    • தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் நடும் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் உத்தரவின் பேரில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி 3-ம் மைல் பாலத்தின் கீழ் சங்கர் காலனியில் 1200 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி மாநகநகர தூய்மையில் மக்களின் பங்களிப்பு, என் குப்பை என் பொறுப்பு என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கனிமொழி எம்.பி.வாசித்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    என் நகரம் என் பெருமை. என் நகரத்தை தூய்மையாகவும், சுத்தமாக வைப்பது என் கடமையும், பொறுப்பும் ஆகும். பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பதே நகர தூய்மைக்கான முதற்காரணம் என்பதை நான் நம்புகிறேன். தூய்மை பணிகளுக்கு என்னை அர்ப்பணித்துக் கொள்ள என் நேரத்தை ஒதுக்குவேன். நான் பொது இடங்களில் குப்பை கொட்ட மாட்டேன்.

    பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டேன். குப்பையை வீட்டிலேயே பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பேன். தூய்மை நகருக்கான என் முயற்சியும், நான் பங்கேற்புடன் என் குடும்பத்தாரையும், சுற்றத் தாரையும் முழு ஆர்வத்துடன் பங்கேற்க ஊக்குவிப்பேன். என்னால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் என் நகரத்தைத் தூய்மையாக வைக்க பேருதவி செய்யும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்ற உறுதிமொழி வாக்கி யங்களை அவர் வாசிக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் வாசித்து தூய்மை உறுதி மொழியை ஏற்றனர்.

    நிகழ்ச்சியில் மரக்கன்று கள் நடும் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி கோட்டுராஜா, கலைச்செல்வி திலகராஜ், மாநகர கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், கனகராஜ், கீதாமுருகேசன், இசக்கி ராஜா, சரவணா குமார், பவானி, கண்ணன், ராமர் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஹரிகணேஷ், ராஜபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர், மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், இயற்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • மரக்கன்றுகள் நடும் விழாவை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முன்னாள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு ரஹ்மத்நகரில் உள்ள பூங்காவில் மாநகராட்சியின் மூலம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதனை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாநகர துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள், ஹரிகணேஷ் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் சார்பில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் மண் வளத்தை பாதுகாப்ப தின்அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

    ஆறுமுகநேரி:

    சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் சார்பில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.நிறுவனத்தின் சுற்றுச்சூழல் துறை மூத்த மேலாளர் ரவிக்குமார் வரவேற்று பேசினார். மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் மண் வளத்தை பாதுகாப்ப தின்அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.வீடுகளிலும், ஆலைகளிலும் தண்ணீரை விரயம் இல்லாமல் சிக்கனமாக பயன்படுத்துதல் மற்றும் நீரின் மறுசுழற்சி பற்றி உதவி தலைவர் சுரேஷ் பேசினார்.

    தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் அலுவலர்கள், பணியாளர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் பூமி வெப்ப மாறுதலை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று உறுதிமொழி ஏற்றனர். விழா ஏற்பாடுகளை நிறுவனத்தின் சுற்றுச்சூழல், சிவில் மற்றும் மக்கள் தொடர்பு துறையினர் செய்திருந்தனர்.

    • விழாவிற்கு கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார்.
    • சிறப்பு அழைப்பாளராக சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

    கடையம்:

    கடையம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சாலை ஓரத்தில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு 70 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் சமுத்திரகனி, வசந்த், காளியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ஜெய சக்திவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டார்.இதில் தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மரக்கன்றுகளை நட்டனர். விழாவில் பணித்தள பொறுப்பாளர்கள் ரஞ்சித் ராணி, அம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரே நாளில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • ஊட்டி தீட்டுக்கல் பகுதியிலும் மரக்கன்று நடப்பட்டது.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சியில் தூய்மை இந்தியா உலக காடுகள் தினத்தை முன்னிட்டு 21-வது வார்டு லோயர் பஜார் பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் மரக்கன்றுகள் நடபட்டது. இதில் நகராட்சி ஆணை யாளர் காந்திராஜன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். மேலும் ஊட்டி தீட்டுக்கல் பகுதியிலும் மரக்கன்று நடப்பட்டது. நேற்று ஒரே நாளில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் நகராட்சி நகர் நல அலுவலர் ஸ்ரீதர், சுகாதார அலுவலர் மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீ பரஞ்சோதி யோகா கல்லூரி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • உலக சமாதான ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது .

    உடுமலை :

    இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு திருமூர்த்திமலை உலக சமாதான அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ பரஞ்சோதி யோகா கல்லூரி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    திருமூர்த்திமலை சுற்று பகுதியில் நடந்த விழாவிற்கு குருமகான் பரஞ்சோதியார் தலைமை வகித்தார். உலக சமாதான அறக்கட்டளை செயலாளர் சுந்தர்ராமன், பொருளாளர் பொன்னுச்சாமி மற்றும் கல்லூரி செயலாளர் செங்குட்டுவன், கல்லூரி நிர்வாக இயக்குனர் புனித வல்லிஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவையொட்டி குரு மகன் பரஞ்சோதியார் மலேசியா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார் .உலக சமாதான ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது .இயற்கையை பாதுகாத்து தர்மம் செய்வதே குருவிற்கு செய்யும் கடமை ஆகும் என தெரிவிக்கப்பட்டது.

    • திண்டுக்கல் ரெயில்வே நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் 75- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் துணிபைகள் வழங்கப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ரெயில்வே நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் 75- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    இதற்கு ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் தலைமை தாங்கினார். இதில் அசிஸ்டன்ட் டிவிஷனல் என்ஜினீயர் நாராயணன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் வனச்சரகர் மதிவாணன், முன்னாள் ராணுவ வீரர் சங்கத் தலைவர் விசுவாசம், நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலர் சரண், கமர்சியல் இன்ஸ்பெக்டர் வீரபெருமாள்,ரெயில்வே நிலைய அலுவலர் கோவிந்தராஜ், சீனியர் செக்சன் என்ஜினீயர் செந்தில்,சுகாதார ஆய்வாளர் சுரேஷ், சமூக ஆர்வலர் பால் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் துணிபைகள் வழங்கப்பட்டது.

    • மதுரை மண்டல தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • நாடு முழுவதும் 75 லட்சம் மரக்கன்றுகளை நட நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    பழனி:

    மதுரை மண்டல தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் பழனி அருகே மொல்லம்பட்டி பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு நெடுஞ்சாலை ஆணைய திண்டுக்கல் திட்ட இயக்குனர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.

    திண்டுக்கல் மாவட்ட வனஅலுவலர் பிரபு முன்னிலை வகித்தார். பின்னர் சாலையோரத்தில் பள்ளி மாணவர்களை கொண்டு 1000 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    இதுகுறித்து நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், நெடுஞ்சாலையோரம் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தலே ஆணையத்தின் முக்கிய நோக்கமாகும். மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் நாடு முழுவதும் நேற்று 100 இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. 'சுற்றுச்சூழலை நிலைநிறுத்துவோம்' என்ற செய்தியை மக்களிடையே கொண்டு செல்ல மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது.

    வருகிற சுதந்திர தினத்துக்குள் நாடு முழுவதும் 75 லட்சம் மரக்கன்றுகளை நட நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது என்றனர்.

    ×