தூத்துக்குடி மாநகராட்சியில் கலைஞரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா - மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்

மரக்கன்றுகள் நடும் விழாவை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகள் நட்ட காட்சி.
மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகள் நட்ட காட்சி.
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முன்னாள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு ரஹ்மத்நகரில் உள்ள பூங்காவில் மாநகராட்சியின் மூலம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதனை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாநகர துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள், ஹரிகணேஷ் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com