சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் சார்பில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் மண் வளத்தை பாதுகாப்ப தின்அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
மரக்கன்று நடும் நிகழ்ச்சியை டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
மரக்கன்று நடும் நிகழ்ச்சியை டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
Published on

ஆறுமுகநேரி:

சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் சார்பில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.நிறுவனத்தின் சுற்றுச்சூழல் துறை மூத்த மேலாளர் ரவிக்குமார் வரவேற்று பேசினார். மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் மண் வளத்தை பாதுகாப்ப தின்அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.வீடுகளிலும், ஆலைகளிலும் தண்ணீரை விரயம் இல்லாமல் சிக்கனமாக பயன்படுத்துதல் மற்றும் நீரின் மறுசுழற்சி பற்றி உதவி தலைவர் சுரேஷ் பேசினார்.

தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் அலுவலர்கள், பணியாளர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் பூமி வெப்ப மாறுதலை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று உறுதிமொழி ஏற்றனர். விழா ஏற்பாடுகளை நிறுவனத்தின் சுற்றுச்சூழல், சிவில் மற்றும் மக்கள் தொடர்பு துறையினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com