search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "silver crown"

    • வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.
    • பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி நகரின் வடகிழக்குத் திசையில் எழுந்தருளி உள்ள கருப்பு கங்கையம்மன் கோவிலுக்கு பெயர், ஊர் விவரம் குறிப்பிடப்படாத பக்தர் ஒருவர் வெள்ளியாலான கிரீடம், கவசம், நாகப்படகு ஆகியவற்றை காணிக்கையாக வழங்கினார். அதை கோவில் நிர்வாகிகள் பெற்று, அந்த பக்தருக்கு தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர்.

    அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் உற்சவர் அம்மனுக்கு அலங்காரம் செய்து, மேளதாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். வழிநெடுகிலும் பக்தர்கள் கங்கையம்மனுக்கு தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் தரிசனம் செய்தனர்.

    • தூத்துக்குடி தருவைகுளத்தில் அதிதூதர் ஆலயம் உள்ளது.
    • இந்த தேவாலயத்தின் முகப்பு பகுதியில் கண்ணாடியினால் செய்யப்பட்ட கூண்டில் மிக்கேல் சொரூபம் வைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தருவைகுளத்தில் அதிதூதர் ஆலயம் உள்ளது.

    இந்த தேவாலயத்தின் முகப்பு பகுதியில் கண்ணாடியினால் செய்யப்பட்ட கூண்டில் மிக்கேல் சொரூபம் வைக்கப்பட்டுள்ளது. அந்த சொரூபத்தின் தலையில் வெள்ளி கீரிடமும் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல வழிபாடு செய்ய தேவலாயத்திற்கு சென்றனர். அப்போது சொரூபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கூண்டுகள் உடைக்கப்பட்டு அதில் இருந்த வெள்ளி கிரீடம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக தருவைகுளம் ஊர்கமிட்டி சார்பாக அனிட்டன் என்பவர் போலீசில் புகார் செய்தார்.

    சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் சென்று விசாரணை நடத்தினார். மேலும் தேவாலய பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி அதில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் ஒரு மர்மநபர் வெள்ளி கீரிடத்தை திருடிச் செல்வது தெரியவந்தது. அந்தநபர் தருவைகுளத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த காட்சிகளை கொண்டு போலீசார் மர்மநபரை தேடி வருகின்றனர்.

    ×