search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sagupuram"

    • சாகுபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • விழாவில் பயனாளிகளுக்கு இலவச சைக்கிள்களும், தையல் எந்திரங்களும் வழங்கப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் விருந்தினர் மாளிகையில் அரிமா மாவட்டத்தின் தொலை நோக்கில் மாற்றத்திற்கான எழுச்சி என்கிற அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    சாகுபுரம் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு மண்டல தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். சாகுபுரம் அரிமா சங்க தலைவர் தாமஸ் மாசிலாமணி முன்னிலை வகித்தார். பொருளாளர் பொன் சரவணன் அறிக்கை வாசித்தார். ஜெயம் மண்டல அரிமா நிர்வாகி ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். விழாவில் 2 பயனாளி களுக்கு இலவச சைக்கிள்களும், 2 பேருக்கு தையல் எந்திரங்களும் வழங்கப்பட்டன. இதில் சாகுபுரம் அரிமா சங்க செயலாளர்கள் முத்துப்பா ண்டியன், சுப்பிரமணியன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • டி.சி.டபிள்யூ விருந்தினர் மாளிகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • அரிமா சங்கத்தின் மண்டல தலைவர் தாமஸ் மாசிலாமணி தலைமை தாங்கினார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ விருந்தினர் மாளிகையில் அரிமா சங்கத்தின் சார்பில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    சாகுபுரம் அரிமா சங்கத்தின் மண்டல தலைவர் தாமஸ் மாசிலாமணி தலைமை தாங்கினார். செயலாளர் சுப்ரமணியன் அறிக்கை வாசித்தார். டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு உதவி தலைவர் சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகளையும், சாதனைகளையும் பாராட்டி பேசினார்.

    விழாவில் 2 பேருக்கு இலவச சைக்கிளும், ஒருவருக்கு தையல் எந்திரமும் வழங்கப்பட்டன. மாணவர் ஒருவருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. திரளானோர் விழாவில் கலந்து கொண்டனர். நிறைவில் சங்கத்தின் நிர்வாகி சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

    • டி.சி.டபிள்யூ நிர்வாகத்தின் சார்பில் உலக ஓசோன் படலம் பாதுகாப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பிளாஸ்டிக் தவிர்ப்பதற்கான உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் உலக ஓசோன் படலம் பாதுகாப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் ஜி.சீனிவாசன் தலைமை தாங்கினார். உற்பத்தி பிரிவு உதவி தலைவர் எஸ். சுரேஷ் முன்னிலை வகித்தார். உலக வெப்பமயமாதலை தடுத்து ஓசோன் படலத்தை பாதுகாப்பதில் தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ள கடமைகளைப் பற்றி கருத்தரங்கம் நடந்தது.

    தொடர்ந்து நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன் பாட்டை தவிர்ப்பதற்கான உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை நிறுவனத்தின் சுற்றுச் சூழல் துறை, சிவில் துறை மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலையின் 64-வது கால்கோள் தின விழா நடைபெற்றது.
    • தொழிலாளர்களும், அலுவலர்களும், நிர்வாகி களும் ஒரு குடும்பத்தினர் போல மகிழ்வுடன் இருப்பதை காண்கிறேன்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலையின் 64-வது கால்கோள் தின விழா நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினர்

    விழாவிற்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் பக்குல் ஜெயின், விவேக் ஜெயின், மூத்த ஆலோசகர் முடித் ஜெயின், சீனியர் பிரசிடெண்ட் ஆசிஸ் ஜெயின், பிரசிடெண்ட் சாத்விக் ஜெயின், முதன்மை செயல் அலுவலர் அமிதாப் குப்தா, முதன்மை ஆப்பரேட்டிங் அலுவலர் சுதர்சன் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா குழு தலைவர் கேசவன் வரவேற்று பேசினார்.

    நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் ஜி.சீனிவாசன் அறிமுக உரை நிகழ்த்தினார். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழக தலைவர் டி.கே. ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-


    இந்த டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை 64-வது ஆண்டை தொட்டிருப்பது ஒரு மைல்கல். நமது நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தோம். அதேபோல் இந்த நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவையும் விரைவில் கொண்டாட உள்ளோம். ஒரு தொழிற்சாலை லாபகரமாக இயங்குவதில்தான் அதன் வெற்றி உள்ளது.

    இங்கு தொழிலாளர்களும், அலுவலர்களும், நிர்வாகி களும் ஒரு குடும்பத்தினர் போல மகிழ்வுடன் இருப்பதை காண்கிறேன். இந்த ஒற்றுமை உணர்வை பாராட்டுகிறேன்.சிறந்த நிர்வாகத்தை தந்து வரும் ஜெயின் குடும்பத்தினர் மேலும் பல தலைமுறைகளை கடந்தும் இந்த தொழிற்சாலையை சீரிய முறையில் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் கிராம சூழலில் இருக்கும் இப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளி கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதையும் பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சிறப்பு மலர் வெளியீடு

    விழாவின் சிறப்பு மலரை டி.கே.ராமச்சந்திரன் வெளியிட அதனை டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் பெற்றுக் கொண்டனர். தொழிற்சாலையில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 29 தொழிலாளர்களுக்கு தலா 6 கிராம் தங்க நாணயமும், 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 136 தொழிலாளர்களுக்கு தலா 4 கிராம் தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 90 பேருக்கு கைகடிகாரம் வழங்கப்பட்டது.

    மேலும் சுற்று வட்டார பள்ளிகளில் அரசு பொது தேர்வில் சாதனை புரிந்த மாணவ- மாணவிகளுக்கும் ரத்த தானம் செய்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சாகுபுரம் கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் தொழிலதிபர்கள் எஸ்.ஆர்.எஸ். சுரேஷ்குமார், டி.ராஜா, ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் அ.கல்யாணசுந்தரம், காண்ட்ராக்டர்கள் கே.சிவகுமார், எஸ்.வெற்றிவேல், ஆறுமுகநேரி நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    விழா குழு துணைத் தலைவர் முருகேந்திரன் நன்றி கூறினார்.

    • யோகா ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமையிலான பயிற்சியாளர்கள் சிவராம், ஸ்ரீதேவி உள்ளிட்ட குழுவினர் பயிற்சிகளை அளித்தனர்.
    • நிகழ்ச்சியில் 500 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்

    ஆறுமுகநேரி:

    சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.

    பள்ளியின் முதல்வர் அனுராதா தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் மதன், மாணவர்களின் மனநல ஆலோசகர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமை ஆசிரியை சுப்புரத்தினா வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான 500 மாணவ மாணவிகள் பல்வேறு வகையான ஆசனங்களை செய்து காட்டினர்.

    யோகா ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமையிலான பயிற்சியாளர்கள் சிவராம், ஸ்ரீதேவி உள்ளிட்ட குழுவினர் பயிற்சிகளை அளித்தனர்.

    ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் செல்வம், மகேஸ்வரி உள்பட பலர் செய்திருந்தனர். தலைமை ஆசிரியர் ஸ்டீபன் பாலாசீர் நன்றி கூறினார்.

    ×