என் மலர்
நீங்கள் தேடியது "Kamalavathi School"
- யோகா ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமையிலான பயிற்சியாளர்கள் சிவராம், ஸ்ரீதேவி உள்ளிட்ட குழுவினர் பயிற்சிகளை அளித்தனர்.
- நிகழ்ச்சியில் 500 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்
ஆறுமுகநேரி:
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் முதல்வர் அனுராதா தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் மதன், மாணவர்களின் மனநல ஆலோசகர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியை சுப்புரத்தினா வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான 500 மாணவ மாணவிகள் பல்வேறு வகையான ஆசனங்களை செய்து காட்டினர்.
யோகா ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமையிலான பயிற்சியாளர்கள் சிவராம், ஸ்ரீதேவி உள்ளிட்ட குழுவினர் பயிற்சிகளை அளித்தனர்.
ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் செல்வம், மகேஸ்வரி உள்பட பலர் செய்திருந்தனர். தலைமை ஆசிரியர் ஸ்டீபன் பாலாசீர் நன்றி கூறினார்.






