என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரிமா சங்கம் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டபோது எடுத்தபடம்.
சாகுபுரத்தில் அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
- சாகுபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
- விழாவில் பயனாளிகளுக்கு இலவச சைக்கிள்களும், தையல் எந்திரங்களும் வழங்கப்பட்டன.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் விருந்தினர் மாளிகையில் அரிமா மாவட்டத்தின் தொலை நோக்கில் மாற்றத்திற்கான எழுச்சி என்கிற அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
சாகுபுரம் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு மண்டல தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். சாகுபுரம் அரிமா சங்க தலைவர் தாமஸ் மாசிலாமணி முன்னிலை வகித்தார். பொருளாளர் பொன் சரவணன் அறிக்கை வாசித்தார். ஜெயம் மண்டல அரிமா நிர்வாகி ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். விழாவில் 2 பயனாளி களுக்கு இலவச சைக்கிள்களும், 2 பேருக்கு தையல் எந்திரங்களும் வழங்கப்பட்டன. இதில் சாகுபுரம் அரிமா சங்க செயலாளர்கள் முத்துப்பா ண்டியன், சுப்பிரமணியன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






