search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "one dead"

    • திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்தது.
    • பலியான முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    புதுக்கோட்டை மாவட்டம் ராஜகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன், முத்து. முத்துவின் உறவினர் அந்தமானில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக மதுரை வருகிறார். அவரை சென்னை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வர டிரைவர் முத்துவை அழைத்துக் கொண்டு காரில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்பொழுது திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் சித்தர் கோவில் அருகே கார் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் மணி, கிருஷ்ணன் ஆகியோர் படுங்காயங்களுடன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் விபத்தில் பலியான முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.

    • விருதுநகர் அருகே நின்றிருந்த பஸ் மீது லாரி மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன்(58). இவர் திருச்செந்தூர் செல்வதற்காக கரூரில் இருந்து தூத்துக்குடிக்கு அரசு பஸ்சில் சென்றார். அந்த பேருந்து கல்குறிச்சி அருகே சென்றபோது பஸ்சின் முன் பக்க டயர் வெடித்தது.

    இதனால் பஸ்சை ஓட்டி வந்த கோவில்பட்டியை சேர்ந்த டிரைவர் பண்டாரம் பஸ்சை சாலையோரமாக நிறுத்திவிட்டு அருப்புக்கோட்டை பணிமனைக்கு தகவல் கொடுக்க சென்றார். பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி சாலையோரத்திலும், பஸ்சின் முன்னாலும் நின்றிருந்தனர். பஸ்சின் கண்டக்டர் ஏகாம்பரம் பழுதடைந்த டயரை கழட்டிக்கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி நின்றிருந்த பஸ்சின் பின் பக்கத்தில் மோதியது. இதில் பஸ் முன் பக்கம் நகர்ந்து நின்றுகொண்டிருந்த பயணிகள் மீது மோதியது. இதில் ஈரோடு மாவட்டம் பாசூரை சேர்ந்த பழனிசாமி என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் முருகேசன், பரமத்திவேலூரை சேர்ந்த லோகநாதன், போத்தனூர் பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து முருகேசன் மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் விளாத்திக்குளத்தை சேர்ந்த பாக்கியராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி மாவட்டம் கூடலூரில் நடந்த விபத்தில் ஒருவர் பலியானார். 5பேர் காயமடைந்தனர்
    • கூடலூர் விபத்தில் ஒருவர் பலி

    கூடலூர்:

    கோவையில் இருந்து குமுளிக்கு பெரியகுளம் பணிமனையை சேர்ந்த அரசு பஸ் சென்றது. பஸ்சை ஜெயமங்கலத்தை சேர்ந்த பழனிச்சாமி (வயது50) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக சசிகுமார் (48) பணியில் இருந்தார். பஸ்சில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    இன்று காலை கூடலூர் வழியாக குமுளிக்கு சென்று கொண்டிருந்தது. பைபாஸ் சாலை அருகே விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு பஸ் எதிர்பாராத விதமாக சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதில் இடிபாடுகளில் சிக்கி கூடலூரை சேர்ந்த கூலித்தொழிலாளி மாயி என்ற கிருஷ்ணமூர்த்தி (50) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காயம் அடைந்த பயணிகள் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இதில் கூடலூரை சேர்ந்த வீராசாமி (60), பெருமாள் (66), மாடசாமி (56), திருப்பூரை சேர்ந்த மலர்விழி, காளியம்மாள் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்ததால் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    நேபாளத்தில் காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். #Bombblast

    காத்மாண்டு:

    நேபாளத்தில் காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்குண்டு வெடிப்பில் அதன் அருகே இருந்த கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் வீட்டு கதவுகள் அதிர்ந்தன. #Bombblast

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூடுபனி காரணமாக நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். #BiharFogConditions #VehiclePileup
    முசாபர்பூர்:

    வடமாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விடிந்து வெகுநேரம் ஆகியும் பனி விலகாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்குகின்றனர். நெடுஞ்சாலையில் கண்ணை மறைக்கும் அளவுக்கு மூடுபனி இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சில சமயங்களில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றுமோதி விபத்துக்குள்ளாகின்றன.

    இந்நிலையில், பீகார் மாநிலம் முசாபர்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பெட்ரோல் டேங்கர் லாரி உள்ளிட்ட 9 வாகனங்கள் பனி மூட்டம் காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் காயமடைந்தனர்.

    இதேபோல் டெல்லி புறநகர்ப் பகுதியில் உள்ள கஞ்சவாலா-பாவனா சாலையில் நேற்று காலை ஒரு கார் திடீரென தீப்பற்றியது. இதனால் அந்த காரை நடுரோட்டில் அப்படியே நிறுத்திவிட்டு, அதில் பயணித்தவர்கள் வெளியேறினர். அப்போது பனிமூட்டம் காரணமாக பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஒரு கார் மற்றும் ஒரு பேருந்து தீப்பற்றியது. சுமார் 25 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால், பலர் காயமடைந்தனர். #BiharFogConditions #VehiclePileup
    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் போராட்டக்குழுவை சேர்ந்த 10 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SterliteProtest #BanSterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சுற்று பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இன்று பொதுமக்களின் போராட்டம் 100-வது நாளை எட்டியது. இதையொட்டி ஏற்கனவே பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து போராட்ட குழுவினருடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு தரப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக கூறினார்கள். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் மற்றும் போராட்ட குழுவினர் திட்டமிட்டப்படி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என அறிவித்தார்கள்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள போலீஸ் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் 4 கூடுதல் சூப்பிரண்டுகள், 13 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 3 ஆயிரம் போலீசார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டனர்.

    தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையம் தெற்கு போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. போராட்டக்குழுவினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டனர்.

    மேலும் கலவரம் ஏற்பட்டால் தடுக்க கூடிய வஜ்ரா மற்றும் வருண் வாகனங்களும் நிறுத்தப்பட்டன. ஸ்டெர்லைட் ஆலை அருகே போராட்டக்காரர்கள் செல்லாத வகையில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் 15 இடங்களில் தற்காலிக வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டன.

    மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து போராட்டத்துக்கு வருகிறார்களா? என்று முழுமையாக கண்காணிக்கப்பட்டது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டால், அவர்களை அடைத்து வைப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

    அதேபோன்று போராட்டத்தில் தீவிரம் காட்டி வருபவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச்சட்டம் 107 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதனிடையே மக்கள் கூட்டமைப்பினர் அறிவித்தபடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பொதுமக்கள் ஆங்காங்கே திரண்டனர். பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் அணி அணியாக திரண்டு வந்தார்கள். தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி மக்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தை நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களை வடபாகம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி பேரணிக்கு அனுமதி இல்லை என்றனர்.

    அப்போது போலீசாருக்கும், பொது மக்களுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு உண்டானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு போலீஸ் தடையையும் மீறி பொதுமக்கள் பேரணியாக புறப்பட்டு சென்றார்கள்.



    இதனிடையே தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே போராட்டக்குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டாது. இதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். பதிலுக்கு பொதுமக்களும் கல்வீசினர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

    பொதுமக்கள் கல்வீசியதால் தங்களை காத்து கொள்ள போலீசார் ஓடும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்த போலீஸ் வாகனங்களை தாக்கினார்கள். சிக்னல் மற்றும் தடுப்புகளும் உடைத்து எறியப்பட்டன. தொடர்ந்து போலீசாரை கடந்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி முன்னேறினார்கள்.

    அதே வேளையில் மடத்தூர் பகுதியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்றார்கள். அவர்களை மடத்தூர் பகுதியில் போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும்-பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ் எண்ணிக்கையை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பதட்டம் உண்டானது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

    எனினும் போலீஸ் தடுப்பையும் மீறி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றார்கள். தூத்துக்குடி 3-ம் மைல் பாலம் அருகே பொதுமக்கள் திரண்டு சென்ற போது கலெக்டர் அலுவலகம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட போலீசார் பொதுமக்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். தடியடியும் நடத்தினார்கள்.

    இந்த சம்பவத்தின் போது போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அங்கிருந்த தனியார் வங்கி மீதும் கல்வீசப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அப்போது பொதுமக்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

    இந்த சம்பவத்தில் ஏராளமானவர்கள் காயம் அடைந்தார்கள். துப்பாக்கி சூட்டில் போராட்டக்குழுவை சேர்ந்த 10 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டது.

    ஜெயராமன், கிளாட்சன்,கந்தையா,வினிஸ்டா,தமிழரசன்,சண்முகம், மணிராஜ், கார்த்திக்,  உள்ளிட்ட 9 பேர் இதுவரை உயிரிழந்தனர். இதனால் துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சில மணிநேரத்திற்கு பின்னர் திரேஸ்புரம் பகுதியில் மீண்டும் போலீசார் போராட்டக்காரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த போராட்டம் காரணமாக தூத்துக்குடி பகுதி முழுவதுமே போர்க்களமானது. இந்த போராட்டங்களால் தூத்துக்குடி நகர் முழுவதுமே பதட்டம், பரபரப்பாக காணப்பட்டது. #SterlitepProtest #BanSterlite
    இந்தோனேசியாவில் போலீஸ் தலைமை அலுவலகத்தில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். #IndonesiaExplosion
    சுரபயா:

    இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுரபயாவில் காவல்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரர் உயிரிழந்ததாக கிழக்கு ஜாவா போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். வாகனங்களை ஓட்டி வந்த யாரோ ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.



    இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அலுவலக வளாகம் முழுவதும் தீவிரமாக சோதனையிடப்பட்டது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது.

    இதே பகுதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று அடுத்தடுத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. #IndonesiaExplosion
    ×