search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Note"

    • சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி கள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என 1500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.
    • இவற்றின் விலை கடந்த ஆண்டை விட 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    சேலம்:

    தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி கள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என 1500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. மாவட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

    இப்பள்ளி, கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல் மாண வர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள், கைடுகள் மற்றும் எழுதுப் பொருட்கள், புத்தகப் பை, டிபன் கேரியர்கள் போன்றவை விற்பனையும் களை கட்ட தொடங்கி யுள்ளன.

    சேலத்தில் உள்ள ஸ்டேஷ னரி கடைகளில் சிவகாசி, மதுரை உள்ளிட்ட பகுதி களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நோட்டு புத்தகங்கள் குவிந்து வருகின்றன. ஆனால், இவற்றின் விலை கடந்த ஆண்டை விட 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. நோட்டு புத்தகங்கள் மட்டு மின்றி உரைநடை (கைடு) புத்தகங்கள் விலையும் உயர்ந்துள்ளது. விலை குறைவாக உள்ள உரைநடை நூல்கள், நோட்டு புத்தகங்களில் உள்ள தாள்களின் தரம் சற்று குறைவாகவே இருப்பதால் பெற்றோர்கள் விலை அதிகம் உள்ள நோட்டு புத்தகங்கள், கைடுகள் ஆகியவற்றை வாங்கிச் செல்கின்றனர். 

    • முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு நினைவு பரிசுகள்.
    • பள்ளி பருவத்தில் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மதுவிலக்கு காவல்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதில் தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், அலோசியஸ், தலைமை காவலர்கள் சீனிவாசன், ரஞ்சனி பிரியா, செந்தமிழ்ச்செல்வி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியை வெற்றி செல்வி அனைவரையும் வரவேற்றார். முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு நினைவு பரிசுகளும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நோட்டுகளும் வழங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரூபாவதி பேசுகையில் பள்ளி பருவத்தில் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது என்றார்.

    முடிவில் ஆசிரியர் இன்பாலன் நன்றி கூறினார்.

    • ஈரோடு மாவட்டத்தில் 6, 7-ம் வகுப்புக்கான பாட புத்தகங்கள் ரெயில்வே காலனி பள்ளியில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
    • இது தவிர 6, 7, 8, 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேவையான 80 பக்க நோட்டுகளும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    ஈரோடு:

    காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வரும் 10-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

    இதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தீவிர படுத்தப்ப ட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கொல்லம் பாளையம் ெரயில்வே காலனி மேல்நிலைப்ப ள்ளியில் இருந்து 6, 7-ம் வகுப்புக்கான 2-ம் பருவ பாட நூல்களும், 6 முதல் 9-ம் வகுப்பு களுக்கான நோட்டுகளும் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    இது குறித்து தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலர்கள் கூறியதாவது:

    காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பெரும்பாலான பள்ளிகளில் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டு 2-ம் பருவ தேர்வுக்கான பாடங்கள் தொடங்கியுள்ளன.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் சுயநிதி பள்ளிகள் என 55 பள்ளிகளுக்கு தேவையான 6, 7-ம் வகுப்புக்கான பாட புத்தகங்கள் ரெயில்வே காலனி பள்ளியில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த பள்ளிகளுக்கு தேவையான அனைத்து பாடப்புத்தகங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தவிர 6, 7, 8, 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேவையான 80 பக்க நோட்டுகளும் அனுப்பி வைக்கப்படுகிறது. 5 பாட புத்தகங்களுக்கு தேவையான 5 வகையான நோட்டுகளும் அனுப்பி வைக்கப்படுகிறது. இவை இலவசமாக வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • புருஷோத்தமன், சேகர் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்களை வழங்குகின்றனர்.
    • மேலும் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் வரவேற்புரையும், மூத்த சமூக ஆர்வலர் கண்ணன் என். ராமகிருஷ்ணன் நன்றியுரையும் ஆற்ற உள்ளனர்.

    திருச்சி

    75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திருச்சி தூய்மை இந்தியா வண்ண மலர் பூங்கா மக்கள் பணிக்குழு சார்பில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நாளை காலை 8.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    மக்கள் பணிக்குழு துணைத் தலைவர் திருப்பதி தேசியக்கொடி ஏற்றி வைத்து கொடி வணக்கம் செலுத்துகிறார். மூத்த சமூக சிந்தனையாளர் புலவர் காசி. விஸ்வநாதன், தேச நலம் மக்கள் சேவை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். புருஷோத்தமன், சேகர் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்களை வழங்குகின்றனர்.

    நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக ரொட்டேரியன் மேஜர் டோனர் டாக்டர் கே.சீனிவாசன் கலந்து கொள்ள உள்ளார். மேலும் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் வரவேற்புரையும், மூத்த சமூக ஆர்வலர் கண்ணன் என். ராமகிருஷ்ணன் நன்றியுரையும் ஆற்ற உள்ளனர்.

    நிகழ்ச்சியில் ராஜரத்தினம், ராமலெஷ்மி, ராஜா, செபி முஹமது, வெங்கடேசன், அமீன், வாசுதேவன், புவனேஷன், பூஞ்சோலை, நடிகர் பாலகிருஷ்ணன், ஸ்ரீதர், குணசீலன், முஹமது இப்ராஹிம், தியாகராஜன், பிரதிவி, இளங்கோவன், சந்திரசேகர், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர்.

    ×