தூய்மை இந்தியா வண்ண மலர் பூங்கா மக்கள் பணிக்குழு சார்பில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம்

புருஷோத்தமன், சேகர் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்களை வழங்குகின்றனர். மேலும் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் வரவேற்புரையும், மூத்த சமூக ஆர்வலர் கண்ணன் என். ராமகிருஷ்ணன் நன்றியுரையும் ஆற்ற உள்ளனர்.
தூய்மை இந்தியா வண்ண மலர் பூங்கா மக்கள் பணிக்குழு சார்பில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம்
Published on

திருச்சி

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திருச்சி தூய்மை இந்தியா வண்ண மலர் பூங்கா மக்கள் பணிக்குழு சார்பில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நாளை காலை 8.30 மணியளவில் நடைபெற உள்ளது.

மக்கள் பணிக்குழு துணைத் தலைவர் திருப்பதி தேசியக்கொடி ஏற்றி வைத்து கொடி வணக்கம் செலுத்துகிறார். மூத்த சமூக சிந்தனையாளர் புலவர் காசி. விஸ்வநாதன், தேச நலம் மக்கள் சேவை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். புருஷோத்தமன், சேகர் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்களை வழங்குகின்றனர்.

நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக ரொட்டேரியன் மேஜர் டோனர் டாக்டர் கே.சீனிவாசன் கலந்து கொள்ள உள்ளார். மேலும் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் வரவேற்புரையும், மூத்த சமூக ஆர்வலர் கண்ணன் என். ராமகிருஷ்ணன் நன்றியுரையும் ஆற்ற உள்ளனர்.

நிகழ்ச்சியில் ராஜரத்தினம், ராமலெஷ்மி, ராஜா, செபி முஹமது, வெங்கடேசன், அமீன், வாசுதேவன், புவனேஷன், பூஞ்சோலை, நடிகர் பாலகிருஷ்ணன், ஸ்ரீதர், குணசீலன், முஹமது இப்ராஹிம், தியாகராஜன், பிரதிவி, இளங்கோவன், சந்திரசேகர், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com