search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Negamam"

    • வடசித்தூரில் பேக்கரி அருகே சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • 380 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வடசித்தூர் நால்ரோட்டில் உள்ள பேக்கரி அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து நெகமம் இன்ஸ்பெக்டர் சரவண பெருமாள் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி விற்னை செய்து கொண்டு இருந்த கிணத்துக்கடவு அருகே உள்ள பணப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 49), குருநல்லி பாளையத்தை சேர்ந்த அம்மாச்சியப்பன் (69) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 380 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • ஒவ்வொரு ஊராட்சியில் ஊராட்சிக்கு தேவையான கட்டிடங்கள் மற்றும் பல்வேறு வகைக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
    • பழமையான ஊராட்சி கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    நெகமம்:

    கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் 34 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு ஊராட்சியில் ஊராட்சிக்கு தேவையான கட்டிடங்கள் மற்றும் பல்வேறு வகைக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் செட்டியக்காபாளையம் ஊராட்சியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்கு செயல்பட்டு வந்த ஊராட்சி மன்ற அலுவலகம் பழைமையான கட்டிடம் என்பதால் அவ்வப்போது மேற்கூரைகள் இடிந்து விழுந்தது. மேலும் மழை காலத்தில் தண்ணீர் கசிந்து உள்ளே இருந்த தளவாட பொருட்கள் அனைத்தும் நனைந்து வீணாகி வந்தன.

    இதனால் பழமையான ஊராட்சி கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் அங்கிருந்த ஊராட்சி மன்ற அலுவலகம் அங்குள்ள நூலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. கிராம மக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்கவும், வீட்டுவரி, குடிநீர் கட்டணம், மற்றும் அரசு அலுவல் தொடர்பாகவும் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

    நூலக கட்டிடம் பழைய கட்டிடமாக உள்ளது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் வேகமாக வடிகிறது. இதன் காரணமாக தளவாட பொருட்கள், முக்கிய ஆவணங்கள் நனையும் நிலை ஏற்படுகிறது. இதனால் ஆவணங்களை அங்கு வைக்க முடிவதில்லை. இடவசதியும் குறைவாக உள்ளது.

    பொதுமக்கள் அலுவ லகத்திற்கு வந்து செல்லவும் சிரமமாக உள்ளது. இதையடுத்து செட்டியக்காபாளையம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டது. கட்டப்பட்டு மாதங்கள் பல ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது அந்த இடத்தில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    செட்டியக்காபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் தற்போது நூலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. நூலக கட்டிடம் ஏற்கனவே பழமையான கட்டிடம் அதுவும் சிதலமடைந்து, மழைக்காலத்தில் மேற்கூரையில் தண்ணீர் தேங்கி உள்புறம் அதிகளவில் கசிந்து வருகிறது.

    மேலும் இடவசதியும் பற்றாக்குறை இதனால் பொதுமக்கள் அங்கு சென்று வர அச்சம் அடைகின்றனர். ஊராட்சி பணியாளர்கள் ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க முடியாமல் திணறி வருகின்றனர். எனவே பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் தயாராக உள்ள புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.

    • கொள்ளை, வழிப்பறி திருட்டு சம்பவங்களை தடுக்கவும், ரேசன் அரிசி கடத்தலை தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கிராம பகுதிகளில் ஒவ்வொரு தெருவிற்கும் நுழைவு வாயில் முன்பு கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும்.

    நெகமம்:

    நெகமம் பகுதியில் கொள்ளை, வழிப்பறி திருட்டு சம்பவங்களை தடுக்கவும், ரேசன் அரிசி கடத்தலை தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அடிக்கடி வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிபவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் குற்றச்சம்பவங்களை தடுக்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி காண்காணித்து வருகின்றனர். இதை தொடர்ந்து தற்போது நெகமத்தில் நான்கு ரோடு சந்திப்பு, வடசித்தூர், நெகமம் போலீஸ் நிலையம் உள்பட 15- க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    மேலும் காட்டம்பட்டி பிரிவு அருகே நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.இந்த கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    திருப்பூர்- பொள்ளாச்சி மெயின் ரோடு, உடுமலை - திருப்பூர் ரோட்டில் நாளுக்கு நாள் அதிகளவில் வாகனங்கள் சென்று வருவதால் இந்த மெயின் ரோட்டில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் இரு சக்கர வாகனத்தில் 3 பேர், 4 பேர் பயணம் செய்வது போன்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து நெகமம் போலீசார் ஒருவர் கூறியதாவது:-காவல் துறை நவீன மயமாக்கல் திட்டத்தின் மூலம் நெகமம் மற்றும் வடசித்தூர் பகுதியில் 15- க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    மேலும் கூடுதலாக ஆண்டிபாளையம், செட்டியக்காபாளையம், செங்குட்டைப்பாளையம், பனப்பட்டி, மெட்டுவாவி, கக்கடவு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கிராம பகுதிகளில் ஒவ்வொரு தெருவிற்கும் நுழைவு வாயில் முன்பு கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும். இதை அப்பகுதி மக்கள் முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்யும் போது கிராமங்களில் திருட்டு சம்பவங்கள், தடுக்க ஏதுவாக இருக்கும். இதை கிராம பகுதி மக்கள் விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நெகமம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெகமம்:

    நெகமம் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நெகமம் என்.சந்திரபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியனை (வயது 66) கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கோவை வெள்ளலூர் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த, அதேபகுதி கோன வாய்க்கால் பாளையம் போயர் தெருவை சேர்ந்த டேவிட் ராஜாவை (வயது 23) போதனூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    நெகமம் அருகே வாலிபரை மரத்தில் கட்டி வைத்து ரூ. 45 ஆயிரத்தை பறித்து சென்ற 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நெகமம்:

    கோவை மாவட்டம் நெகமம் அடுத்துள்ள கொல்லபட்டியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 25). இவர் அனுப்பர்பாளையத்தில் பிரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த 6 -ந்தேதி இரவு மதன் குமார் பிரவுசிங் சென்டரில் பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். ஆலாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டு இருந்த போது காரில் வந்த 4 பேர் மதன் குமாரை வழிமறித்தனர்.

    பின்னர் அவரை அங்குள்ள மரத்தில் கட்டிப் போட்டு அடித்து உதைத்து அவரிடம் இருந்த ரூ. 54 ஆயிரத்தை பறித்தனர். பின்பு மதன்குமாரின் கட்டுகளை அவிழ்த்து விட்டு காரில் தப்பி சென்று விட்டனர்.காயம் அடைந்த மதன்குமார் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மயக்கம் தெளிந்து நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    விசாரணையில் மதன் குமாரை மரத்தில் கட்டி வைத்து பணத்தை பறித்தது ஆலாம்பாளையத்தை சேர்ந்த ஹரி, பிரசாத், மடத்துக்குளம் கவின், சுந்தர கவுன்டனூர் பரத் என்பது தெரிய வந்தது. அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இரவு நேரத்தில் வாலிபரை மரத்தில் கட்டிப்போட்டு பணம் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×