என் மலர்

  நீங்கள் தேடியது "Leg Pain"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொருத்தமற்ற காலணிகளை அணிவதால், கால்கள் மட்டுமல்லாமல் பாதங்களில் உள்ள நரம்புகளும் பாதிக்கப்படும். முக்கியமாக முதுகுவலிப் பிரச்சனைக்கும் வழிவகுக்கும்.
  பாதங்கள்தான் ஒட்டுமொத்த உடலையும் தாங்கும் அஸ்திவாரம். பாதங்களில் பிரச்சனை வந்தால் உடல் ஆட்டம் கண்டுவிடும். நிற்கவோ, நடக்கவோ முடியாமல் ஒரே இடத்தில் முடங்கி விடுவோம். பாதங்களில் பாதிப்பு ஏற்பட நாம் அணியும் காலணிகளும்கூடக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ‘‘பொருத்தமற்ற காலணிகளை அணிவதால், கால்கள் மட்டுமல்லாமல் பாதங்களில் உள்ள நரம்புகளும் பாதிக்கப்படும். முக்கியமாக முதுகுவலிப் பிரச்சனைக்கும் வழிவகுக்கும்’’.

  சியாட்டிகா (Sciatica)

  சியாட்டிகா என்பது ஒருவித அடிப்புற இடுப்புவலி. குதிகால் உயர்ந்த காலணிகளை அணிவதே இதற்கு முக்கியக் காரணம். இந்தப் பிரச்னை  பாதம் முதல் தொடை, இடுப்பு மற்றும் பின்புறம் வரைக் கடுமையான வலியை ஏற்படுத்தும்; கால்கள் மரத்துப்போகும். நடக்கும் போதும் குனியும்போதும் வலி அதிகமாக உணரப்படும்.

  தட்டைப்பாதங்கள் (Flat Feet)

  முன் பாதத்துக்கும் குதிகாலுக்கும் இடையே ‘ஆர்ச்’ (Arch) போன்ற இடைவெளி இல்லாமல் தட்டையாக இருப்பதைத் `தட்டைப் பாதம்’ என்பார்கள். இது பெரும்பாலும், குழந்தைப் பருவத்திலேயே ஏற்படுகிறது. அதற்கேற்ப ஷூ அணியாவிட்டால் சிலருக்குப் பாதத்தின் `ஆர்ச்’ பகுதியிலும் குதிகால்களிலும் வலி ஏற்படும். நாளடைவில் நிற்பது, நடப்பது போன்ற நிலைகளிலும் மாற்றம்  ஏற்பட்டு, அது கால் மூட்டு, இடுப்பு, பின்புறப்பகுதி, முதுகு ஆகியவற்றிலும் வலியை உண்டாக்கும். பாதங்களின் `ஆர்ச்’ எப்படி இருக்கிறதோ அதற்கேற்ற காலணிகளை அணிய வேண்டும்.  குதிகால் வலி (Achilles Tendinopathy)

  குதித்து விளையாடும் வகையிலான செயல்பாடுகளால் சிலருக்குக் குதிகால் மற்றும் கெண்டைக்கால் தசையில் வலி, வீக்கம், கணுக்காலில் தசை இறுக்கம் உண்டாகும்.  பெரும்பாலும் நடனக்கலைஞர்கள், டென்னிஸ் விளையாட்டு வீரர்களுக்கு இந்த வகைப் பிரச்னைகள் ஏற்பட்டாலும், பொருத்தமற்ற காலணிகளை அணிவதே முக்கியக் காரணமாகும். வலியை உணர்பவர்கள் குதிகால்களுக்கு அழுத்தம் கொடுக்கும் செயல்பாட்டினை நிறுத்த வேண்டும். கால்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி வலிநிவாரண மருந்துகளை எடுத்துக்கொண்டு நிவாரணம் பெறலாம்.

  காலணிகள் தேர்வில் கவனம் இருக்கட்டும்

  * காலணிகளின் உள்பகுதி பஞ்சு போன்று மிருதுவாக இருக்க வேண்டும். அதிக எடையும் அழுத்தமும் இல்லாமல் இருக்க வேண்டும்.

  * இரண்டு அங்குலத்துக்கு மேல் அதிக உயரமுள்ள காலணிகளை (ஹை ஹீல்ஸ்) அணியக் கூடாது.

  * குறுகலான அளவுள்ள (Narrow Shoes) ஷூக்களை அணியக்கூடாது.

  * தரையில் வழுக்காத  செருப்புகளையே பயன்படுத்த வேண்டும்.

  * தோல் செருப்புகளும் ஷூக்களுமே சிறந்தவை.  பிளாஸ்டிக் செருப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

  * சர்க்கரைநோய் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி காலணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கால்களில் அதிக நீர் தேக்கம் ஏற்படும் பொழுது பாதங்களிலும் கணுக்காலிலும் வீக்கம் ஏற்படுகின்றது. இதற்கான சில பொது காரணங்களை இங்கு பார்ப்போம்.
  கணுக்காலிலும், காலிலும் வீக்கம் என்பது அசவுகர்யமாக இருக்கும். கவலை அளிக்கும். இதற்கு பல முக்கியக் காரணங்கள் உள்ளன. ஆனால் சில சாதாரண காரணங்களும் இருக்கக் கூடும். வெகு நேரம் நிற்க நேர்ந்தால் கூட இந்த வீக்கம் ஏற்படும். பாதமும் கணுக்காலும் கீழ் கால்களில் அதிக நீர் தேக்கம் ஏற்படும் பொழுது ஏற்படுகின்றது. அதில் சில பொதுவான காரணங்களை கீழே பார்ப்போம்.

  * பலருக்கு அதிக நேரம் நின்று கொண்டே பார்க்க வேண்டிய வேலை இருக்கும். கால்களை நகர்த்தாது, அசைக்காது, நடக்காது தொடர்ந்து ஓரிடத்தில் நின்று கொண்டே வேலை பார்க்கும் பொழுது கால்களில் ரத்த ஓட்டத்தின் வேகம் குறைகின்றது. இதனால் பாதம், கணுக்கால் இவற்றில் நீர் தேக்கம் ஏற்படுகின்றது.

  அதே போன்று கால்களை வெகு நேரம் தொங்க போட்டவாறு உட்காருபவர்களுக்கும் இதே பாதிப்பு ஏற்படும். இதனை தவிர்க்க வேண்டியது அவரவர் கையில்தான் உள்ளது. 30 நிமிடங்களுக்கொருமுறை 5 நிமிடங்கள் நடக்க வேண்டும். அப்பொழுது தான் ரத்த ஓட்டம் சீராய் இருக்கும். இதனை முறையாக செய்யாவிட்டால் பல பாதிப்புகள் ஏற்படும்.

  * இறுக்கமாக அணிவதால் கால்களில் கொப்பளம் ஆகுவது மட்டுமல்ல கணுக்காலில் வீக்கம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே இறுக்கமான ஷீக்களை அணிவதனை அடியோடு தவிர்த்து விடுங்கள்.

  * அதிகம் உப்பு உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் நீர்தேக்கம் இருக்கும். இது பாதம் கணுக்கால் மட்டுமல்ல, உடல் முழுவதுமே வீக்கத்தினை உண்டாக்கும். இதுபோன்று உணர்ந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

  * அதிக எடை உடலில் கூடும் பொழுது உடல் இந்த எடையினைத் தாங்க கூடுதல் உழைப்பினைத் தர வேண்டும். கால், பாதங்களின் மீது அதிக அழுத்தம் ஏற்படுவதால் காலில் வீக்கம் ஏற்படலாம். இத்தகையோர் தகுந்த உணவு முறை அறிவுறுத்தலின் படி முயற்சித்து எடையை குறைக்க வேண்டும். முறையான உடல் பயிற்சியினையும் மேற்கொள்ள வேண்டும். கர்ப்பகாலத்திலும் கால், பாதத்தில் வீக்கம் ஏற்படுவதுண்டு. இவர்கள் மருத்துவ ஆலோசனையை முறையாய் பின்பற்ற வேண்டும்.

  * கணுக்கால், கால் வீக்கம் என்பது இருதய பாதிப்பினாலும், வலுவிழந்த இருதய தசைகள் காரணமாகவும் ஏற்படலாம். சோர்வு, மூச்சிறைப்பு, இருமல், எடை கூடுதல், அடிக்கடி சிறுநீர் செல்லுதல் போன்ற அறிகுறிகளுடன் கணுக்கால், பாத வீக்கமும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

  * எலும்பு முறிவு, மூட்டு முறிவு போன்றவை ஏற்பட்டால் வீக்கம் இருக்கவே செய்யும். மருத்துவ சிகிச்சையே இதற்குத் தீர்வு.

  * பாக்டீரியா, பூஞ்ஞை பாதிப்புகளும் கணுக்கால், பாதத்தில் இருந்தால் வீக்கம் இருக்கும். மருத்துவ சிகிச்சை அவசியம்.

  * காரில், ரயிலில், விமானத்தில் வெகு நேரம் காலை தொங்க போட்டுக் கொண்டு செல்லும் பொழுது கால் சிறிது வீங்கலாம். இது பின்னர் எழுந்து நடக்கும் பொழுது தானே சரியாகி விடும். அப்படி இல்லையெனில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். 
  ×