search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Janani"

    • எழுத்தாளர் பாஸ்கர் சக்தி 'வடக்கன்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
    • தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

    வெண்ணிலா கபடி குழு, எம் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி 'வடக்கன்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    இந்த படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் நடித்துள்ளனர். இருவருமே இப்படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகின்றனர். கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார்.

    சமீபத்தில் 'வடக்கன்' படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'வடக்கன்' திரைப்படம் வருகிற மே 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தெகிடி படத்தைத் தொடர்ந்து அசோக் செல்வனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஜனனி ஐயர்.
    • பாலா படத்தின் அவன் இவன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

    இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஜனனி ஐயர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெகிடி, அதே கண்கள், உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

    இதையடுத்து அறிமுக இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள 'வேழம்' திரைப்படத்தில் ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    வேழம்

    வேழம்

    இந்த நிகழ்ச்சியில் 'வேழம்' திரைப்படம் அனுபவம் மற்றும் கதை குறித்து பேசிய ஜனனி ஐயர் திடீரென்று தனது பெயரில் இருந்த ஐயர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டதாக கூறியுள்ளார். மேலும் இனிமேல் அனைவரும் தன்னை ஜனனி என்று அழைக்கவும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    பிக்பாஸ் படம் மூலம் மிகவும் பிரபலமான ஜனனி, தற்போது பிடித்த நடிகருடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார். #Janani #BiggBoss
    இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜனனி ஐயர். இதைத் தொடர்ந்து பாகன், தெகடி, அதே கண்கள், பலூன், விதி மதி உல்டா உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இறுதி வரை சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர்.

    தற்போது இவர் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த புதிய படத்தை சந்தீப் என்பவர் இயக்க உள்ளார். மர்மம், கொலை கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார்.



    அசோக் செல்வனும், ஜனனியும் ஏற்கனவே ‘தெகிடி’ படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர். இப்படத்தில் இவர்களின் ஜோடி அதிகம் பேசப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக இப்படம் மூலம் இணைந்திருக்கிறார்கள். 

    பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வந்திருக்கும் நடிகை ஜனனி, மாலைமலருக்கு அளித்த பேட்டியில் விஜய் பேசியது எனக்கு பொருந்தும் என்று கூறியிருக்கிறார். #Janani #Vijay
    அவன் இவன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜனனி. இப்படத்தை அடுத்து ‘தெகிடி’, ‘பலூன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் 2 வீட்டிற்கு சென்று வந்திருக்கும் இவர் மாலைமலருக்கு அளித்த பேட்டி பின்வருமாறு,

    பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு உங்களின் முதல் ரியாக்‌ஷன்?

    பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, எப்போது வெளியில் சென்று பொது மக்களை பார்க்க போகிறோம் என்று ஏங்கினேன். வெளியில் வந்தவுடன் மக்களை பார்க்கும் போது நம்ப முடியாமல் இருந்தது. வெளியில் இருக்கும் போது நிறைய விஷயங்கள், உணவுகளை அலட்சியம் செய்திருக்கிறோம். ஆனால், அங்கு ஒரு கேக் இருந்தால் கூட அடித்துக் கொண்டு சாப்பிட்டிருக்கிறோம். ஒவ்வொன்றும் ஏங்கி ஏங்கிதான் கிடைத்திருக்கிறது. சாப்பாட்டின் அருமை பிக்பாஸ் வீட்டில்தான் தெரிந்தது.

    பாலா படத்தில் அறிமுகமான அனுபவம், பிக்பாஸ் வீட்டின் அனுபவம் இவற்றிற்கும் இடையேயான வேறுபாடு?

    பாலா படத்தில் நடித்தது எனக்கு சினிமாத்துறையில் பெரிய அறிமுகமாக இருந்தது. அதற்கு பாலா சார்தான் காரணம். அது நடிப்பு பற்றிய அனுபவம். பிக்பாஸ் வீட்டில், ஜனனி யாரு? எப்படி? என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். இது வேற அனுபவம்.

    சினிமாத்துறையில் நீங்கள் கற்றுக் கொண்ட விஷயங்கள்?

    சினிமாவில் ஒவ்வொருத்தருக்கும், நேரம், என்று ஒன்று அமையும். அப்போது, அவர்களுடைய கடின உழைப்பு எல்லாம் தெரியும். அதற்கு பொறுமை தேவை. அதைத்தான் நான் கற்றுக் கொண்டேன்.

    தெகிடி 2 எப்போது?

    அப்போவே தெகிடி படத்தின் 2ம் பாகம் உருவாவது பற்றி பேச்சுகள் இருந்தது. அப்படி உருவானால், கண்டிப்பாக நடிப்பேன்.

    பலூன் படம் பற்றி?

    பலூன் படத்தில் பாவடை சட்டை போட்டு நடித்திருந்தேன். சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தது. 



    பிக்பாஸ் வீட்டில் இருந்த போது நீங்கள் மிஸ் செய்தது?

    என் குடும்பத்தை நான் மிகவும் மிஸ் செய்தேன். போனை தான் மிகவும் மிஸ் பண்ணுவேன் என்று நினைத்தேன். ஆனால், அப்படி நடக்க வில்லை.

    அரசியலுக்கு வருவீர்களா?
    எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம். 

    உங்களுக்கு பிடித்த ஹீரோ?
    எனக்கு அஜித் சார் (தல) ரொம்ப பிடிக்கும்.

    யார் உங்களுக்கு பெஸ்ட்?
    முதல் படத்தில் என்னுடன் நடித்த ஆர்யா, விஷால்

    பிக்பாஸ் வீட்டில் உங்கள் விஷபாட்டில் என்று பேர் வைத்தார்கள்? நீங்கள் யாருக்கு வைப்பீர்கள்?
    நான் டேனிக்கு விஷபாட்டில் என்று பெயர் வைப்பேன்.

    காதல் அனுபவம் இருக்கா?
    நான் காதலித்திருக்கிறேன். ஆனால், இப்போ யாரும் இல்லை.

    சினிமாவில் தமிழ் பெண்ணுக்கு வாய்ப்புகள் குறைவு, அதை தக்க வைக்க எடை குறைப்பு, உணவு கட்டுப்பாடு முயற்சி செய்தீர்களா?

    பெரிய முயற்சி ஒன்றும் இல்லை. உணவு கட்டுப்பாடு இல்லை. கொழுப்பு சத்து அதிகம் உள்ள பொருட்களையும் சாப்பிடுவேன். ஆனால், எடை போட மாட்டேன். அது எனக்கு இறைவன் கொடுத்த வரம். 

    மீடூ பற்றி?

    எல்லாத்துறையிலும் பாலியல் தொல்லைகள் நடக்கிறது. ஆனால், அதைப்பற்றி நிறையபேர் தைரியமாக சொல்கிறார்கள். அது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இது சரியான நேரம். இப்போ பேச வில்லை என்றால், நிறைய விஷயங்கள் வெளியில் வராது.

    ஜனனிக்கு என்ன பிடிக்கும்?
    ராஜா சார் மியூசிக் கேட்டுக் கொண்டு, தனியாக காரில் நீண்ட தூரம் செல்ல பிடிக்கும்.

    சினிமாவை விட்டு போக நினைத்ததுண்டா?
    அப்படி நினைத்தது இல்லை. வீட்டில் தான் என்ஜினியரிங் படித்து விட்டு ஏன் சினிமாவில் என்று கேட்பார்கள். ஆனால், எனக்கு சினிமாவில்தான் ஆர்வம் அதிகம். வயதான பிறகும் சினிமாவில் ஏதாவது ஒன்று செய்து கொண்டிருப்பேன்.

    எப்படிப்பட்ட கதைகளை தேர்வு செய்ய ஆர்வமாக இருக்கிறீர்கள்?
    எனக்கு ஏற்ற கதையாக இருக்கவேண்டும். கிளாமர் எனக்கு செட்டாகுமானு தெரியவில்லை. வெயிட்டான ரோல். மக்கள் மனதில் நிற்கிறமாதிரியான ரோல். 



    இந்த கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கலாம் என்று நினைத்தது உண்டா?

    வரலாற்று கதைகளில் நடிக்க ஆசைப்பட்டதுண்டு. முந்தைய காலத்திற்கு நம்மால் செல்ல முடியாது. அதுமாதிரியான படங்களில் நடித்தாலாவது அந்த அனுபவத்தை பெற்றுக் கொள்ளலாம். ஜோதா அக்பர் போல் ராணி கதாபாத்திரம் கிடைத்தால் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

    சர்கார் இசை வெளியீட்டில் விஜய் பேசியது பற்றி?
    உசுப்பேத்றவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்திறவன் கிட்ட கம்முனும் இருந்தால் வாழ்க்கை ஜம்முனுக்கு இருக்கும் என்று விஜய் பேசியது எனக்கு பொருந்தியது. நான் அப்படித்தான் இருப்பேன். 

    பிக்பாஸ்க்கு பிறகு?
    பிக்பாஸ்க்கு பிறகு எல்லாரும் என்னிடம் நன்றாக பேசுகிறார்கள். எங்க வீட்டு பெண் போல்தான் நாங்கள் பார்த்தோம் என்று கூறுகிறார்கள். நான் வெளியே வரும் போது நிறைய பேர் அழுதார்கள். அது எனக்கு வருத்தமாக இருந்தது. 

    ஒரே நேரத்தில் விஜய், அஜித் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால்?
    இரண்டு பேரையும் பிடிக்கும். ஆனால், அஜித் படத்தில்தான் நடிப்பேன். விஜய் ரசிகர்கள் மன்னித்து விடுங்கள். 

    பிடித்த இயக்குனர்கள்?
    பாலா, மணிரத்னம்

    பிடித்த படம்?
    அலைபாயுதே

    ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது?
    கூடிய சீக்கிரம் நல்ல படங்களில் என்னை பார்ப்பீர்கள். தொடர்ந்து உங்கள் அன்பை கொடுங்கள். ரசிகர்கள் அனைவரையும் கண்டிப்பாக பார்ப்பேன். 
    ×