பெயரில் திருத்தம் செய்த பாலா பட நடிகை.. வைரலாகும் வீடியோ..

தெகிடி படத்தைத் தொடர்ந்து அசோக் செல்வனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஜனனி ஐயர்.பாலா படத்தின் அவன் இவன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.
ஜனனி
ஜனனி
Published on

இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஜனனி ஐயர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெகிடி, அதே கண்கள், உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இதையடுத்து அறிமுக இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள 'வேழம்' திரைப்படத்தில் ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

வேழம்
வேழம்

வேழம்

இந்த நிகழ்ச்சியில் 'வேழம்' திரைப்படம் அனுபவம் மற்றும் கதை குறித்து பேசிய ஜனனி ஐயர் திடீரென்று தனது பெயரில் இருந்த ஐயர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டதாக கூறியுள்ளார். மேலும் இனிமேல் அனைவரும் தன்னை ஜனனி என்று அழைக்கவும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com