search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vezham"

    • வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடிக்கும் அசோக் செல்வன் நடித்துள்ள படம் 'வேழம்'.
    • இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    அறிமுக இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் 'வேழம்'. இந்த படத்தில் ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), சங்கிலி முருகன் மற்றும் மராத்தி நடிகர் மோகன் அகாஸ்தே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கே 4 கிரியேஷன்ஸ் சார்பில் கேசவன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஆர்.ஜானு சாந்தர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளதை அடுத்து இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

    இதையடுத்து 'வேழம்' படக்குழுவினர் மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளனர். 'வேழம்' படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர்.

    "இந்த படத்தில் இருக்கும் முக்கிய மூன்று கதாபாத்திரங்களும் கண்டிப்பாக கதைக்கு தேவை என்பதற்காக தான் இயக்குனர் வைத்துள்ளார். ஒரு கதாபாத்திரம் கூட கதைக்கு தேவையில்லை என்று இருக்காது. எங்கள் படக்குழு விஜய் சேதுபதியிடம் போஸ்டரை ரிலீஸ் செய்ய கூறியுள்ளனர். உடனே அதற்கு அவரும் ஒப்புக் கொண்டார். மற்றபடி அவர் என் படங்களை எல்லாம் பார்க்கவில்லை. எனக்கு தெரிந்து அவர் படத்தை பார்ப்பதற்கே அவருக்கு நேரம் இருக்காது" என்று அசோக் செல்வன் கூறியுள்ளார்.



    • தெகிடி படத்தைத் தொடர்ந்து அசோக் செல்வனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஜனனி ஐயர்.
    • பாலா படத்தின் அவன் இவன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

    இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஜனனி ஐயர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெகிடி, அதே கண்கள், உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

    இதையடுத்து அறிமுக இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள 'வேழம்' திரைப்படத்தில் ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    வேழம்

    வேழம்

    இந்த நிகழ்ச்சியில் 'வேழம்' திரைப்படம் அனுபவம் மற்றும் கதை குறித்து பேசிய ஜனனி ஐயர் திடீரென்று தனது பெயரில் இருந்த ஐயர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டதாக கூறியுள்ளார். மேலும் இனிமேல் அனைவரும் தன்னை ஜனனி என்று அழைக்கவும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடிக்கும் அசோக் செல்வன் நடித்துள்ள படம் 'வேழம்'.
    • இப்படம் ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அறிமுக இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் 'வேழம்'. இந்த படத்தில் ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), சங்கிலி முருகன் மற்றும் மராத்தி நடிகர் மோகன் அகாஸ்தே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கே 4 கிரியேஷன்ஸ் சார்பில் கேசவன் தயாரித்துள்ள இப்படத்திற்கு சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.கே.பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். ஆர்.ஜானு சாந்தர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    இசை வெளியீட்டு விழா

    இசை வெளியீட்டு விழா

    'வேழம்' திரைப்படம் ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள ஒரு எஃப்எம் நிலையத்தில் நடைபெற்றது. மேலும், இப்படத்தின் 'மாறும் உறவே' என்ற வீடியோ பாடலை இசையமைப்பாளர் டி. இமான் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    எஸ்.பி. சினிமாஸ், 'வேழம்' திரைப்படத்தினை திரையரங்குகளில் வெளியிடும் உரிமத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அறிமுக இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் 'வேழம்'.
    • 'வேழம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது வைரலாகி வருகிறது.

    அறிமுக இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் 'வேழம்'. இந்த படத்தில் ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), சங்கிலி முருகன் மற்றும் மராத்தி நடிகர் மோகன் ஆகாஷே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேழம் படத்திற்கு சக்தி அரவிந்த் ஒளிப்பதி செய்துள்ளார். ஏ.கே.பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். ஆர்.ஜானு சாந்தர் இசையமைத்துள்ளனர்.

    வேழம்

    வேழம்

    வேழம் திரைப்படம் வருகிற ஜூன் 24-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். சுவாரஸ்யமான கொலை மர்ம திரில்லராக வேழம் படம் உருவாகியுள்ளது. இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    ×