என் மலர்

  சினிமா செய்திகள்

  வெளியானது வேழம் திரைப்படத்தின் இசை
  X

  இசை வெளியீட்டு விழா

  வெளியானது 'வேழம்' திரைப்படத்தின் இசை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடிக்கும் அசோக் செல்வன் நடித்துள்ள படம் 'வேழம்'.
  • இப்படம் ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  அறிமுக இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் 'வேழம்'. இந்த படத்தில் ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), சங்கிலி முருகன் மற்றும் மராத்தி நடிகர் மோகன் அகாஸ்தே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  கே 4 கிரியேஷன்ஸ் சார்பில் கேசவன் தயாரித்துள்ள இப்படத்திற்கு சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.கே.பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். ஆர்.ஜானு சாந்தர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

  இசை வெளியீட்டு விழா

  'வேழம்' திரைப்படம் ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள ஒரு எஃப்எம் நிலையத்தில் நடைபெற்றது. மேலும், இப்படத்தின் 'மாறும் உறவே' என்ற வீடியோ பாடலை இசையமைப்பாளர் டி. இமான் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

  எஸ்.பி. சினிமாஸ், 'வேழம்' திரைப்படத்தினை திரையரங்குகளில் வெளியிடும் உரிமத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×