search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Isari Ganesh"

    • தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஜெயம் ரவி முக்கியமானவர்
    • அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது.

    தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஜெயம் ரவி முக்கியமானவர். டிக் டிக் டிக் படத்தில் விண்வெளி வீரனாக, வனமகன் படத்தில் காட்டுவாசியாகவும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சைரன், அகிலன் , இறைவன் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அவர் நடித்து கொண்டு இருக்கும் படம் ஜீனி. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

    இதில் ஒரு அலாவுதீன் பூதத்தைப்போல் தோற்றம் அளித்துள்ளார். உண்மையில் அவர் எப்பேர்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்று படத்தின் டிரெய்லர் வெளியானால் தான் தெரியும்.

    அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது.

    கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

    ஃபேண்டசி கதைக்களத்துடன் அமைந்துள்ள ஜீனி படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம்தான் ஜெயம் ரவி திரை பயணத்தில் மிகப் பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம். படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. 60 கோடிக்கு மேல் ஜீனி படத்தின் டிஜிட்டல் உரிமை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது.
    • ஃபேண்டசி கதைக்களத்துடன் அமைந்துள்ள ஜீனி படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

    மணி ரத்னம் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான பொன்னின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மனாக மக்களின் மனதை கவர்ந்தார் ஜெயம் ரவி. பின் நயந்தாராவுடன் இணைந்து இறைவன் படத்தில் நடித்தார்.

    ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, யோகி பாபு, அனுபமா பரமேஸ்வரன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகியது சைரன் படம்.

    மக்கள் மத்தியில் சைரன் திரைப்படம் நல்ல பெயரை வாங்கியது. இதைத் தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக ஜீனி படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது.

    கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

    ஃபேண்டசி கதைக்களத்துடன் அமைந்துள்ள ஜீனி படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.இப்படம்தான் ஜெயம் ரவி திரை பயணத்தில் மிகப் பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம். படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மதியம் 2 மணியளவில் வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தில் இடம்பெறும் திருமண மண்டபத்திற்காக ஐசரி கணேஷ் ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார். #NadigarSangam #IsariGanesh
    தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வருகிறது. ரூ.30 கோடி செலவில்  தரைதளத்துடன் மூன்று மாடிகளில் இந்த கட்டிடம் அமையவிருக்கிறது. நடிகர் சங்க அலுவலகம் உடற்பயிற்சி கூடம், கருத்தரங்கு கூடம், திருமண மண்டபம் உள்ளிட்டவை இந்த கட்டிட வளாகத்தில் இடம்பெறுகின்றன.

    வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் கட்டுமான பணிகள் முடிவடைந்து நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டிடத்தில் ரூ.2 கோடி செலவில் ஐசரி வேலன் பெயரில் அமைய உள்ள மினி திருமண மண்டபத்திற்கான முழு செலவையும் நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினர் ஐசரி கணேஷ் ஏற்றுள்ளார். இதற்கான முன் தொகையாக ரூ.1 கோடியை நேற்று வழங்கினார்.

    இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    “தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளையின் அறங்காவலருமான ஐசரி கணேஷ் நடிகர் சங்கத்தின் 62-ம் ஆண்டு பொதுக்குழுவில் அறிவித்து ஒப்புதல் பெற்றதின் அடிப்படையில் நடிகர் சங்க இடத்தில் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் கட்டிடத்தில் உள்ள சிறிய திருமண மண்டபத்திற்கு அவரது தந்தையான ஐசரி வேலன் பெயரை வைப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் அதற்கான கட்டுமான செலவுத்தொகை அனைத்தையும் அவரே ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டார்.

    எனவே அதனடிப்படையில் முதற்கட்டமாக ரூ.1 கோடியை நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் ஐசரி கணேஷ் வழங்கினார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அவருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #NadigarSangam #IsariGanesh

    ×