search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IREvPAK"

    • பாகிஸ்தானின் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் அரை சதமடித்தனர்.
    • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

    டப்ளின்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமனில் இருந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்ரும் 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் லோர்கன் டக்கர் அதிரடியாக ஆடி 73 ரன்கள் குவித்தார்.

    பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. பாபர் அசாம் (75 ரன்), முகமது ரிஸ்வான் (56 ரன்) அரைசதம் அடித்து அசத்தினர்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 17 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.

    • இந்த பட்டியலில் ரோகித் சர்மா, எம்எஸ் டோனி ஆகியோர் 5-வது இடத்தில் உள்ளனர்.
    • 3-வது இடத்தில் இயன் மோர்கன் உள்ளார்.

    டப்ளின்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 194 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 195 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    அது என்னவெனில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்ற வீரர்கள் பட்டியலில் உகாண்டாவின் பிரையன் மசாபாவை பின்னுக்கு தள்ளி பாபர் அசாம் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகள்;

    பாபர் அசாம் - பாகிஸ்தான் - 45

    பிரையன் மசாபா - உகாண்டா -44

    இயான் மோர்கன் - இங்கிலாந்து - 42

    அஸ்கர் ஆப்கான் - ஆப்கானிஸ்தான் - 42

    எம்.எஸ்.டோனி - இந்தியா - 41

    ரோகித் சர்மா - இந்தியா - 41

    ஆரோன் பின்ச் - ஆஸ்திரேலியா - 40

    • பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.
    • முதல் டி 20 போட்டியில் அயர்லாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது.

    டப்ளின்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் லார்கான் டக்கர் அரை சதமடித்து 51 ரன்களில் அவுட்டானார்.

    பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 194 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் 16.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் அதிரடியாக ஆடி 75 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

    • முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.
    • அயர்லாந்து ஒரு பந்து மீதம் வைத்து இலக்கை எட்டி சாதனைப் படைத்தது.

    பாகிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முதல் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீசியது. கேப்டன் பாபர் அசாம் (57), சாய்ம் ஆயூப் (45) இப்திகார் அகமது (37) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

    பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ஆண்டி பால்பிரைன் ஒரு பக்கம் நிலைத்து நின்று விளையாடினார். மறுபக்கம் விக்கெட்டுகள் விக்கெட்டுக்கள் சரிந்தது. பால்பிரைன் 55 பந்தில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரது ஆட்டத்தால் அயர்லாந்து 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து வெற்றி பற்றது. ஹாரி டெக்டர் 36 ரன்களும், ஜார்ஜ் டக்ரெல் 24 ரன்களும் எடுத்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி அயர்லாந்து சாதனைப் படைத்துள்ளது.

    கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக களம் இறங்கிய அயர்லாந்து பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 130 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. #IREvPAK
    அயர்லாந்து அணி டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை கடந்த வருடம் பெற்றது. அதன்பின் முதல் டெஸ்டை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட முடிவு செய்தது. அந்த டெஸ்ட் கடந்த 11-ந்தேதி டப்ளினில் தொடங்கியது.

    டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. தங்களது நேர்த்தியான பந்து வீச்சால் பாகிஸ்தானை 350 ரன்களுக்கு மேல் தாண்டவிடாமல் பார்த்துக் கொண்டது. ஆல்அவுட் ஆக மனமில்லாத பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னி்ங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் அயர்லாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. கே ஓ'பிரைன் அதிகபட்சமாக 40 ரன்களும், வில்லிசன் அவுட்டாகாமல் 33 ரன்களும், ஸ்டிர்லிங், ராங்கின் தலா 17 ரன்களும் அடிக்க அயர்லாந்து முதல் இன்னிங்சில் 47.2 ஓவர்கள் விளையாடி 130 ரன்னில் ஆல்அவுட் ஆனது.



    இந்த நான்கு பேரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ் நான்கு விக்கெட்டும், சதாப் கான் 3 விக்கெட்டும், முகமது அமிர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    அயர்லாந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 180 ரன்கள் பின்தங்கி பாலே-ஆன் ஆனது. பாகிஸ்தான் அணியும் பாலோ-ஆன் கொடுக்க அயர்லாந்து தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் அயர்லாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.
    பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ஸ்வெட்டரில் பச்சை நிறம் காணாமல் போனதால் வாசிம் அக்ரம் வேதனை அடைந்துள்ளார். #IPL2018 #IREvPAK #WasimAkram
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1990-களில் தலைசிறந்த அணியாக விளங்கியது. இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், முஷ்டாக் அகமது, சக்லைன் முஷ்டாக், இன்சமாம் உல் ஹக் போன்ற தலைசிறந்த வீரர்கள் அந்த அணியில் விளையாடினார்கள்.

    பாகிஸ்தான் என்றாலே ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது பச்சை நிறமே. அந்த அணி ஒரு நாள் போட்டியில் பச்சை நிற ஜெர்ஸிதான் அணியும். டெஸ்ட் போட்டியின்போது வெள்ளை நிறத்தில் ஜெர்ஸி அணிந்தாலும், ஏதாவது ஒரு இடத்தில் பச்சை ஒட்டியிருக்கும்.



    இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு பயணத்தின்போது வீரர்கள் ஸ்வெட்டர் அணிவது உண்டு. அந்த ஸ்வெட்டரின் கழுத்துப்படை பச்சை நிறமாக இருக்கும்.

    தற்போது பாகிஸ்தான் அணி அயர்லாந்துக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்டின்போது பாகிஸ்தான் வீரர்கள் அணிந்த ஸ்வெட்டரின் கழுத்துப்பட்டையில் பச்சை நிறத்தை காணவில்லை.



    இது வாசிம் அக்ரமிற்கு வேதனை அளித்தது. இதுகுறித்து தனது ஆதங்கத்தை டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இதையறிந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இதை கவனித்தில் கொண்டு வந்த வாசிம் அக்ரமிற்கு நன்றி தெரிவித்ததுடன், பச்சை நிறம் மிஸ் ஆகியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளது.
    வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் அயர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. #IREvPAK
    அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் டெஸ்ட் தொடங்கியது. மழைக் காரணமாக முதல்நாள் ஆட்டம் முழுவதும் தடைபட்டது.

    நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அசார் அலி, இமாம்-உல்-ஹக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அசார் அலி 4 ரன்னிலும், இமாம்-உல்-ஹக் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த ஹரிஸ் சோஹைல் 31 ரன்னும், ஆசாத் ஷபிக் 62 ரன்னும் எடுக்க 2-வது நாள் ஆட்டம் முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது. சதாப் கான் 52 ரன்னுடனும், ஃபஹீம் அஷ்ரப் 61 ரன்னுடனும் களத்தில் நின்றிருந்தனர்.


    சதாப் கான்

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய சதாப் கான் 55 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் 83 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் அவுட்டானதும் பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்துக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜாய்ஸ் 4 ரன்னிலும், போட்டர்பீல்டு 2 ரன்னிலும், பால்பிரைனி டக்அவுட்டிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை அயர்லாந்து 6.1 ஓவரில் 5 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்துள்ளது.
    அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. #IREvPAK
    அயர்லாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட சர்வதேச கிரிக்கெட் கமிட்டி கடந்த வருடம் அனுமதி அளித்தது. அதனடிப்படையில் வரலாற்று சிறப்புமிக்க அறிமுக டெஸ்டில் அயர்லாந்து பாகிஸ்தான் உடன் விளையாட முடிவு செய்தது.



    அந்த டெஸ்ட் இன்று டப்ளினில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழைக் காரணமாக போட்டி இன்று தொடங்கவில்லை. முதல்நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையினால் ரத்து செய்யப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டிற்காக அயர்லாந்து இன்னும் ஒருநாள் (நாளை) காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    ×