search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் அணியின் ஸ்வெட்டரில் காணாமல் போன பச்சை நிறம்- வாசிம் அக்ரம் வேதனை
    X

    பாகிஸ்தான் அணியின் ஸ்வெட்டரில் காணாமல் போன பச்சை நிறம்- வாசிம் அக்ரம் வேதனை

    பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ஸ்வெட்டரில் பச்சை நிறம் காணாமல் போனதால் வாசிம் அக்ரம் வேதனை அடைந்துள்ளார். #IPL2018 #IREvPAK #WasimAkram
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1990-களில் தலைசிறந்த அணியாக விளங்கியது. இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், முஷ்டாக் அகமது, சக்லைன் முஷ்டாக், இன்சமாம் உல் ஹக் போன்ற தலைசிறந்த வீரர்கள் அந்த அணியில் விளையாடினார்கள்.

    பாகிஸ்தான் என்றாலே ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது பச்சை நிறமே. அந்த அணி ஒரு நாள் போட்டியில் பச்சை நிற ஜெர்ஸிதான் அணியும். டெஸ்ட் போட்டியின்போது வெள்ளை நிறத்தில் ஜெர்ஸி அணிந்தாலும், ஏதாவது ஒரு இடத்தில் பச்சை ஒட்டியிருக்கும்.



    இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு பயணத்தின்போது வீரர்கள் ஸ்வெட்டர் அணிவது உண்டு. அந்த ஸ்வெட்டரின் கழுத்துப்படை பச்சை நிறமாக இருக்கும்.

    தற்போது பாகிஸ்தான் அணி அயர்லாந்துக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்டின்போது பாகிஸ்தான் வீரர்கள் அணிந்த ஸ்வெட்டரின் கழுத்துப்பட்டையில் பச்சை நிறத்தை காணவில்லை.



    இது வாசிம் அக்ரமிற்கு வேதனை அளித்தது. இதுகுறித்து தனது ஆதங்கத்தை டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இதையறிந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இதை கவனித்தில் கொண்டு வந்த வாசிம் அக்ரமிற்கு நன்றி தெரிவித்ததுடன், பச்சை நிறம் மிஸ் ஆகியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளது.
    Next Story
    ×