search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold"

    • தங்கத்தை போல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 97.50-க்கும் பார் வெள்ளி ரூ.97,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையே நீடிக்கிறது. பெரும்பாலும் அதன் விலை உயர்ந்து வருவதையே பார்க்க முடிகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிரடியாக உயர்ந்துள்ளது.

    இன்று தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,720-க்கும் சவரன் ரூ. 53,760-க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்தை போல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 97.50-க்கும் பார் வெள்ளி ரூ.97,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
    • கிராமுக்கு 3 ரூபாய் 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.97-க்கும் பார் வெள்ளி ரூ.97,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக ஒரு நிலையற்ற தன்மையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,750-க்கும், சவரன் ரூ.54,000-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.97-க்கும் பார் வெள்ளி ரூ.97,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 2 ரூபாய் குறைந்து 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • தங்கம் மற்றும் வெள்ளி விலை போட்டி போட்டு உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.55, 200-க்கும் கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,900-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.4.50 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும் பார் வெள்ளி ரூ.1,00,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் மற்றும் வெள்ளி விலை போட்டி போட்டு உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    • வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • தங்கம் மற்றும் வெள்ளி விலை போட்டி போட்டு உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    சென்னை:

    அட்சய திருதியை நாளான மே 10-ந்தேதிக்கு பிறகு தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

    கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,850-க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 54,800-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.96.50-க்கும் பார் வெள்ளி ரூ.96,500-க்கும் விற்பனையாகிறது.

    தங்கம் மற்றும் வெள்ளி விலை போட்டி போட்டு உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    • வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.92.50-க்கும் பார் வெள்ளி ரூ.92,500-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    அட்சய திருதியை நாளான மே 10-ந்தேதிக்கு பிறகு தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது.

    கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,770-க்கும் சவரன் ரூ. 54,160-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.92.50-க்கும் பார் வெள்ளி ரூ.92,500-க்கும் விற்பனையாகிறது.

    • தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 795 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே நீடித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 795 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 92 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

    • நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து தங்கம் வென்றார்.
    • 3 ஆண்டில் முதன்முறையாக இந்திய மண்ணில் நடந்த போட்டியில் அவர் பதக்கம் வென்றார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

    3 ஆண்டுகளில் முதன்முறையாக இந்திய மண்ணில் நடந்த போட்டியில் அவர் பதக்கம் வென்றுள்ளார்.

    போட்டியின் தொடக்கத்தில் முன்னிலை பெற கடுமையாக போராடினார். 3 சுற்றுகளுக்கு பின் 2-வது இடம் பிடித்த அவர், 4-வது சுற்றில் 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து முன்னிலை பெற்றார். போட்டியில் மற்றவர்களைவிட தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில் இறுதிச்சுற்றில் அவர் விளையாடவில்லை.

    இந்தப் போட்டியில் டி.பி.மானு 82.06 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அட்சய திருதியையொட்டி தங்கம் விலை ஒரே நாளில் 3 முறை உயர்ந்து காணப்பட்டது.
    • தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 10-ந்தேதி அட்சய திருதியையொட்டி தங்கம் விலை ஒரே நாளில் 3 முறை உயர்ந்து காணப்பட்டது. விலை உயர்ந்திருந்தாலும், அன்றைய தினம் தங்கம் விற்பனை அதிகமாகவே இருந்தது. அதற்கு மறுநாளில் இருந்து விலை குறையத் தொடங்கியது.

    அதன்படி, 11, 13 (நேற்று முன்தினம்) மற்றும் 14-ந்தேதி (நேற்று) என 3 நாட்களாக விலை சரிந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு அதிகரித்து 91 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • அட்சய திருதியை முன்னிட்டு நேற்று 3 முறை தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டது.
    • தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    பொதுவாக தங்கம் விலையில் நாளொன்றுக்கு 2 முறை மாற்றம் இருக்கும். அதன்படி, காலை மற்றும் மாலை என இருவேளைகளில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால், அட்சய திருதியை முன்னிட்டு நேற்று 3 முறை தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டது.

    நேற்றுமுன்தினம் மாலை நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 615-க்கும், ஒரு பவுன் ரூ.52 ஆயிரத்து 920-க்கும் விற்பனையானது. ஆனால், அட்சய திருதியை தொடங்கியதும் நேற்று அதிகாலை 5 மணிக்கு மேல் ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 660-க்கும், ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 280-க்கும் விற்பனையானது.

    காலை 8 மணியளவில், தங்கம் விலை ஏற்றம் கண்டு, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 705-க்கும், ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த சூழலில், நேற்று மாலை 4 மணியளவில் தங்கம் விலை 3-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 770-க்கும், ஒரு பவுன் ரூ.54 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இப்படி நேற்று ஒரே நாளில், கிராம் ஒன்றுக்கு ரூ.155-ம், பவுனுக்கு ரூ.1,240-ம் தங்கம் விலை உயர்ந்தது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து 90 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

    • பெரும்பாலான நகைகடைகளில் தங்க நாணயம் விற்பனைக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது.
    • கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், ரூ.11 ஆயிரம் கோடி வரையில் தங்க நகைகள் விற்பனை இருந்தது.

    சென்னை:

    சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியையே, 'அட்சய' திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். அனைத்து நலன்களையும் குறைவில்லாமல் அள்ளிக்கொடுக்கும் இந்த திருதியை நாளன்று, வாங்கும் பொருள் இல்லங்களில் அளவில்லாமல் சேரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

    அந்த வகையில், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் மக்கள் தங்க நகைகளை வாங்கி மகிழ்கின்றனர். இந்த ஆண்டு, அட்சய திருதியை நேற்று அதிகாலை 4.56 மணிக்கு தொடங்கி, இன்று (சனிக்கிழமை) மதியம் 2.50 மணியுடன் முடிவடைகிறது.

    அட்சய திருதியை முன்னிட்டு, நகைகடைகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளும் அறிவித்தன. பவுனுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி, பழைய நகைகளுக்கு கூடுதல் விலை, செய்கூலி, சேதாரம் தள்ளுபடி என சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

    கூட்டம் அதிகம் குவியும் என்பதால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான நகைகடைகள் நேற்று அதிகாலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. நேற்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில், நகைகடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    அதேபோல், ஜி.ஆர்.டி. ஜூவல்லரி, ஜோயாலுக்காஸ், மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ், பீமா கோல்ட் ஜூவல்லரி, பிரின்ஸ் ஜூவல்லரி, கல்யாண் ஜூவல்லர்ஸ், போத்தீஸ் ஸ்வர்ண மஹால் ஆகிய கடைகளில் அட்சய திருதியை முன்னிட்டு நேற்று காலை முதல் இரவு வரை கூட்டம் அலைமோதியது.


    நகைகடைகளில் குறிப்பிட்ட நேரத்தில், நகைகளை வாங்குவதற்கு, ஒரு வாரத்துக்கு முன்பே, 75 சதவீத தொகை செலுத்தி பலர் முன்பதிவு செய்து, நகைகளை நல்ல நேரத்தில் வாங்கினர். விதவிதமான டிசைன்களில் நகைகள் அட்சய திருதியை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. பெண்கள் அட்சய திருதியை நாளில் தங்களுக்கு பிடித்த தங்கம் மற்றும் வைரம், வெள்ளி நகைகளை ஆர்வத்துடன் தேர்வு செய்து மகிழ்ச்சியுடன் அணிந்துக்கொண்டனர்.

    பெரும்பாலான நகைகடைகளில் தங்க நாணயம் விற்பனைக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், ரூ.11 ஆயிரம் கோடி வரையில் தங்க நகைகள் விற்பனை இருந்தது. நடப்பாண்டு, விற்பனை அதிகரித்துள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    அட்சய திருதியை விற்பனை தொடர்பாக தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:-

    சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 45 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகளில் நேற்று கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    தேர்தல் நடைமுறை அமலில் இருந்தபோது, பொதுமக்களால் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக வெளியே கொண்டு செல்ல முடியவில்லை. தற்போது, அந்த நடைமுறை விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், அட்சய திருதி நாளில் மக்கள் அதிகளவு நகைகளை வாங்க குவிந்தனர். கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் ரூ.11 ஆயிரம் கோடி வரையில் தங்கம் உள்பட நகைகள் விற்பனை இருந்தது. ஆனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், 25 முதல் 30 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன்மூலம், நேற்று ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக தங்கம் உள்பட பல்வேறு நகைகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    • நகைக்கடைகளில் தங்க நகைகள் வாங்குவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பெண்கள் குவிந்தனர்.
    • தங்களுக்கு பிடித்த நகைகளை பெண்கள் ஆர்வமுடன் வாங்கினார்கள்.

    சென்னை:

    அட்சய திரிதியை அன்று தங்க நகை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும், அடிக்கடி தொடர்ந்து தங்கம் வாங்கி குவிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது ஆண்டாண்டு காலமாக மக்களிடையே உள்ள நம்பிக்கையாகும். இதனால் அள்ள அள்ளக் குறையாத செல்வ வளங்களை வாரித்தரும் அட்சய திரிதியை அன்று சிறிய நகையையாவது வாங்கிவிட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

    இதனால், அட்சய திரிதியை நாளான இன்று நகைக்கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. சென்னை தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, குரோம்பேட்டை, பாடி, அண்ணாநகர், தாம்பரம் ஆகிய இடங்களில் உள்ள நகைக்கடைகளில் தங்க நகைகள் வாங்குவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பெண்கள் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை ஆர்வமுடன் வாங்கினார்கள்.

    முன்னதாக, அட்சய திரிதியையொட்டி தங்கம் விலை இன்று காலையிலேயே 2 முறை அதிகரித்தது. கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது.

    இந்நிலையில், இன்று 3-வது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. தற்போது சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,160-க்கும் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,770-க்கும் விற்பனையாகிறது. மொத்தத்தில் இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×