search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கம் விற்பனை"

    • ரகுராமின் வங்கி எச்.டி.எப்.சி. வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை அபேஸ் செய்து உள்ளனர்.
    • அரும்பாக்கம் போலீசில் ரகுராம் புகார் அளித்தார்.

    சென்னை:

    சென்னை வானகரம் சக்தி நகரை சேர்ந்தவர் ரகுராம். இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு 'ஆன்லைன் கோல்டு டிரேடிஸ்' என்ற பெயரில் குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. அதில் குஜராத்தில் உள்ள எஸ்.வங்கியின் வங்கி கணக்கு குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் பின்னர் ரகுராமின் வங்கி எச்.டி.எப்.சி. வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை அபேஸ் செய்து உள்ளனர். குறுஞ்செய்தியை அனுப்பிய நபரே ஏமாற்றி பணம் பறித்திருப்பது தெரிய வந்தது. இதனால் ரகுராம் அதிர்ச்சி அடைந்தார். இதுதெடார்பாக அரும்பாக்கம் போலீசில் ரகுராம் புகார் அளித்தார்.

    இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்லைன் மோசடி தொடர்பாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள் தேவையில்லாமல் வரும் எஸ்.எம்.எஸ்.களை கண்டு கொள்ளாமல் கடந்து சென்றுவிட வேண்டும் என்று போலீஸ் தரப்பில் தொடர்ந்து அறிவுரை கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் பலர் ஆன்லைன் வியாபாரத்தை நம்பி ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள்.

    அந்த வகையில்தான் சென்னை வாலிபர் ரூ.5 லட்சம் பணத்தை இழந்து தவித்து வருகிறார்.

    ×