என் மலர்

  நீங்கள் தேடியது "online scam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நவீன முறையில் ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபட்ட கண்ணூர் பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலத்தில் கிரிப்டோ கரன்சி என்ற டிஜிட்டல் பணத்தின் பேரில் மோசடி நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதன் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

  இந்த நிலையில் கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் ஒரு கும்பல் பொதுமக்களிடம் அதிக அளவில் பணத்தை பெற்று இரட்டிப்பாக தருவதாக மோசடியில் ஈடுபட்டனர்.

  இதுபற்றி கண்ணூர் பகுதியை சேர்ந்த இளம் தொழில் அதிபர் ஒருவர் புகார் தெரிவித்தார். இதன்பேரில் கண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நவீன முறையில் ஆன்லைன் மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டது கண்ணூர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ், சபீக், வாசிம் முனாவரலி மற்றும் முகமது சபீக் ஆகியோர் என தெரிய வந்தது.

  இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் இவர்கள் ஏராளமானோரிடம் அதிக பணம் பெற்று கிரிப்டோ கரன்சியாக திருப்பி தருவதாக கூறி ரூ.100 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

  இதற்காக தனியாக நிறுவனம் நடத்தி அதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளனர். அந்த பணத்திற்கு பதிலாக கிரிப்டோ கரன்சி என்னும் டிஜிட்டல் பணம் திருப்பி தருவதாக கூறி ஏமாற்றி உள்ளனர். மேலும் அவர்கள் பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மும்பையை சேர்ந்த மருத்துவர் ஆன்லைன் ஊழலில் ஒற்றை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்திருக்கிறார். #OnlineScam  மும்பையை சேர்ந்த மருத்துவர் ஒற்றை க்ளிக் செய்து சுமார் ரூ.3 லட்சம் இழந்துள்ளார். இது தொடர்பாக பிபின் மஹாடோ என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

  போலீசார் கைது செய்துள்ள பிபின் மஹாடோ பணத்தை பறிக் கொடுத்த மருத்துவரிடம் ஒரேமுறை மட்டும் பேசி, அவருக்கே தெரியாமல் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2.9 லட்சம் பணத்தை நூதன முறையில் திருடியிருக்கிறார்.

  சில தினங்களுக்கு முன் வங்கியில் இருந்து பேசுவதாக பிபின் மருத்துவரிடம் தெரிவித்தார். மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டதால், பிபின் வங்கியில் இருந்து பேசுவதை மருத்துவரிடம் நிரூபிக்க அவரது வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்தார்.  மேலும், மருத்துவர் பயன்படுத்தும் வங்கி செயலியை மேம்படுத்த வங்கி சார்பில் அனுப்பப்படும் இணைய முகவரியை க்ளிக் செய்ய பிபின் மருத்துவரிடம் தெரிவித்திருக்கிறார். இதை முழுமையாக நம்பிய மருத்துவர் பிபின் சொன்னதை போன்று அவன் அனுப்பிய இணைய முகவரியை க்ளிக் செய்தார்.

  இணைய முகவரியை க்ளிக் செய்ததும் மருத்துவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.9 லட்சம் தொகை எடுக்கப்பட்டு விட்டதாக மருத்துவருக்கு தகவல் கிடைத்தது. பின் பிபினை தொடர்பு கொள்ள மருத்துவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியை தழுவின.

  இறுதியில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் காவல் துறை உதவியை நாடினார். போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவர் வங்கி கணக்கில் இருந்த தொகை மாற்றப்பட்ட வங்கி கணக்கு கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவரை ஏமாற்றி அவரது பணத்தை பிபின் பறித்தது உறுதி செய்யப்பட்டது.
  ×