search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disruption of traffic"

    • பொதுமக்கள் அச்சம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு டவுன் சேர்ந்தவர்கள் பாலா (வயது 19). 18 வயதுடைய சிறுவன். இவர்கள் 2 பேரும் நேற்று செய்யாறு பைபாஸ் சாலையில் நின்று கொண்டு போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தினர். இதனால் அந்த வழியாக சென்றவர்கள் அச்சமடைந்தனர்.

    இது குறித்து செய்யாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய 2 பேரை பிடித்தனர்.

    போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாதசாரிகளையும் அச்சுறுத்தி வருவதாக புகார்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    செங்கம்:

    செங்கம் நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செங்கம் நகரில் உள்ள 18 வார்டுகளிலும் குறிப்பாக புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், மெயின், மில்லத் நகர், போளூர் சாலை, தளவாநாயக்கன்பேட்டை, மேலப்பாளையம், ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு உள்பட போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் சுற்றி திரிகிறது.

    மேலும் கூட்டமாக மாடுகள் சாலையில் வழிமறித்து நிற்பதால் பல்வேறு நேரங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

    மேலும் இரவு நேரங்களில் சாலையின் நடுவே மாடுகள் படுத்துக் கொள்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது மோதி விபத்தில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர்.

    இது குறித்து பலமுறை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி தெரியும் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் பாதுகாத்து வளர்க்காமல் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் விட்டு செல்வதாகவும் இதனால் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என சாலைகளில் செல்லும் பாதசாரிகளையும் கால்நடைகள் அச்சுறுத்தி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் உள்ளனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் உட்பட கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாள ர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என செங்கம் பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மற்றும் வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • குடிபோதையில் அட்டூழியம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த குப்பிடி சாத்தம் கிராமத்தில் பஸ் நிலையம் அருகே அதே கிராமத்தைச் சேர்ந்தராஜி என்பவரது மகன் ஆறுமுகம் (வயது 22) என்பவர் குடிபோதையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்து, பொது மக்களை அவதூறாக பேசினார்.

    இது குறித்து கலவை போலீஸ் நிலையத்தில் புகார் செய் யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சென்று ஆறுமுகத்தை கைது செய்தனர். ஏற்கனவே இவர் மீது கஞ்சா வழக்கு நிலு வையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • ரோந்து சென்ற போது சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு ரகளை செய்தார். போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்தார். ரோந்து சென்ற கண்ணமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தரணி அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • போக்குவரத்திற்கு இடையூறு செய்ததால் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு டவுன், காஞ்சிபுரம் சாலையிலும், ஆற்காடு சாலையிலும் தூசி காவல் நிலையத்துக்கு உட்பட்ட மாங்காலிலும், பெரணமல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட முனுகப்பட்டு கிராமத்திலும் 4 வாலிபர்கள் போக்குவரத்திற்கு இடையூறு செய்தும், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் ரகளை செய்வதாக போலீசுக்கு வந்த தகவலின் பேரில் 4 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

    போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர்கள் செய்யாறு கண்ணியம் நகரை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

    இதே போல் மோரணம் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.

    • பொதுமக்களை அச்சுறுத்தியதால் போலீசார் கைது செய்தனர்
    • ஜெயிலில் அடைப்பு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்தைக்கோடி யூர் பகுதியில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தைக்கோடியூர் பஸ் நிலையத்தில் பொதுமக்க ளுக்கும் மற்றும் போக்குவரத்துக்கும் இடையூறாக பொதுமக்களை அச்சுறுத்தி வாலிபர் ஒருவர் மிரட்டிக்கொண்டு சுற்றித் திரிந்தார்.

    அவரை போலீசார் எச்சரித்தனர் ஆனால் வாலிபர் மீண்டும் தகராறு செய்து கொண்டு இருந்தார். இதனையடுத்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஏலகிரி கிராமம் குள்ள கிழவன் வட்டம் பகுதியை சேர்ந்த சிலம்பர சன் (வயது 36) என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • திருப்புவனம் அருகே தொடர் மழையால் பாலம் அடித்துச்செல்லப்பட்டது.
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டு 5 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பிரமனூர் ஊராட்சியைச் சோ்ந்த வயல்சோி-காிசல்குளம் சாலையில் பாலம் அமைந்துள்ளது. தொடா் மழையின் காரணமாக இந்த பாலம் அடித்து செல்லப்பட்டது.

    இந்த பாலம் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, காிசல்குளம் உள்பட 5 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. இந்த சாலை ஊராட்சி ஒன்றிய சாலையாகும்.

    பாலம் சேதமடைந்து உள்ளது தொடா்பாக, கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், புளியங்குளம் முதல்வாடி தரைப்பாலம் நீரில் மூழ்கி பாலத்திற்கு 2 அடி தண்ணீர் செல்வதைத் தொடா்ந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குழந்தைகள். பொதுமக்கள் பாலத்தை கடக்க இயலாத நிலை உள்ளதால், உடனடியாக இந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வருவாய்த்துறை, ஊராட்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலா்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, சிவகங்கை கோட்டாட்சியா் சுகிதா, ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் வெண்ணிலா, நீர்வளத்துறை செயற்பொறியாளா் (சருகனியாறு வடிநிலைக் கோட்டம்) பாரதிதாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    ×