என் மலர்
உள்ளூர் செய்திகள்

போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபர்
- பொதுமக்களை அச்சுறுத்தியதால் போலீசார் கைது செய்தனர்
- ஜெயிலில் அடைப்பு
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்தைக்கோடி யூர் பகுதியில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தைக்கோடியூர் பஸ் நிலையத்தில் பொதுமக்க ளுக்கும் மற்றும் போக்குவரத்துக்கும் இடையூறாக பொதுமக்களை அச்சுறுத்தி வாலிபர் ஒருவர் மிரட்டிக்கொண்டு சுற்றித் திரிந்தார்.
அவரை போலீசார் எச்சரித்தனர் ஆனால் வாலிபர் மீண்டும் தகராறு செய்து கொண்டு இருந்தார். இதனையடுத்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஏலகிரி கிராமம் குள்ள கிழவன் வட்டம் பகுதியை சேர்ந்த சிலம்பர சன் (வயது 36) என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story