search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழையால் அடித்துச்செல்லப்பட்ட பாலம்
    X

    தொடர் மழையால் அடித்து செல்லப்பட்ட வயல்சேரி- கரிசல்குளம் பாலத்தை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர் மழையால் அடித்துச்செல்லப்பட்ட பாலம்

    • திருப்புவனம் அருகே தொடர் மழையால் பாலம் அடித்துச்செல்லப்பட்டது.
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டு 5 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பிரமனூர் ஊராட்சியைச் சோ்ந்த வயல்சோி-காிசல்குளம் சாலையில் பாலம் அமைந்துள்ளது. தொடா் மழையின் காரணமாக இந்த பாலம் அடித்து செல்லப்பட்டது.

    இந்த பாலம் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, காிசல்குளம் உள்பட 5 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. இந்த சாலை ஊராட்சி ஒன்றிய சாலையாகும்.

    பாலம் சேதமடைந்து உள்ளது தொடா்பாக, கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், புளியங்குளம் முதல்வாடி தரைப்பாலம் நீரில் மூழ்கி பாலத்திற்கு 2 அடி தண்ணீர் செல்வதைத் தொடா்ந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குழந்தைகள். பொதுமக்கள் பாலத்தை கடக்க இயலாத நிலை உள்ளதால், உடனடியாக இந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வருவாய்த்துறை, ஊராட்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலா்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, சிவகங்கை கோட்டாட்சியா் சுகிதா, ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் வெண்ணிலா, நீர்வளத்துறை செயற்பொறியாளா் (சருகனியாறு வடிநிலைக் கோட்டம்) பாரதிதாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×