போக்குவரத்திற்கு இடையூறு; 2 பேர் கைது

பொதுமக்கள் அச்சம் போலீசார் விசாரணை
போக்குவரத்திற்கு இடையூறு; 2 பேர் கைது
Published on

செய்யாறு:

செய்யாறு டவுன் சேர்ந்தவர்கள் பாலா (வயது 19). 18 வயதுடைய சிறுவன். இவர்கள் 2 பேரும் நேற்று செய்யாறு பைபாஸ் சாலையில் நின்று கொண்டு போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தினர். இதனால் அந்த வழியாக சென்றவர்கள் அச்சமடைந்தனர்.

இது குறித்து செய்யாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய 2 பேரை பிடித்தனர்.

போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com