என் மலர்
நீங்கள் தேடியது "Covaxin"
- கோவேக்சின் தடுப்பூசி 2 முதல் 18 வயது வரையிலான பிரிவினருக்கு செலுத்தி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
- இந்த பரிசோதனை அறிக்கையை 'லேன்செட் தொற்று நோய்கள்' பத்திரிகை ஏற்று வெளியிட்டுள்ளது.
ஐதராபாத் :
ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தார், கொரோனாவுக்கு எதிராக தயாரித்து வழங்கும் கோவேக்சின் தடுப்பூசி 2 முதல் 18 வயது வரையிலான பிரிவினருக்கு செலுத்தி இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் முடிவில், கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது, நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடியது மற்றும் அதிக நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பாரத் பயோடெக் நிறுவனத்தார் அறிவித்துள்ளனர்.
இந்த பரிசோதனை அறிக்கையை 'லேன்செட் தொற்று நோய்கள்' பத்திரிகை ஏற்று வெளியிட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தார் கோவேக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வரையிலானவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் தொடங்கி செப்டம்பர் வரையில் செலுத்தி பரிசோதித்துள்ளனர்.
இதன் தரவுகள் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன்பேரில் 6 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த அவசர கால பயன்பாட்டு அனுமதி தரப்பட்டுள்ளது.
முற்றிலும் இந்திய தயாரிப்பான ‘கோவேக்சின்’ கொரோனா தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு தனது அவசர பயன்பாட்டு பட்டியலில் சமீபத்தில் சேர்த்தது.
இந்தநிலையில், இங்கிலாந்து தனது நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் கோவேக்சினை சேர்த்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு அளித்த அங்கீகாரத்தை ஏற்று, கோவேக்சின், சினோவாக், சினோபார்ம் பீஜிங் ஆகிய தடுப்பூசிகள் 22-ந் தேதி (நேற்று) முதல் அங்கீகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதனால், இங்கிலாந்து செல்ல திட்டமிட்டுள்ள 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ள இந்தியர்கள் பலனடைவார்கள். அவர்கள் இங்கிலாந்து செல்வதற்கு முன்பு பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்யவோ, இங்கிலாந்தில் தங்கும் இடத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளவோ தேவையில்லை.

