என் மலர்
செய்திகள்

கோவேக்சின்
கோவேக்சின் 2 டோஸ் செலுத்திய இந்தியர்களுக்கு நவம்பர் 22 முதல் அனுமதி - இங்கிலாந்து அறிவிப்பு
இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலிய அரசு ஏற்கனவே அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசி, இங்கிலாந்தின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் கடந்த மாதம் சேர்க்கப்பட்டது.
இதற்கிடையே, உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து கோவேக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி கடந்த வாரம் கிடைத்தது.
இந்நிலையில், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசிக்கும் இங்கிலாந்து அரசு அங்கீகாரம் அளித்தது.
இதுதொடர்பாக, இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 22 முதல் 2 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து அனுமதி கிடைத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நவம்பர் 22-ம் தேதி அதிகாலை 4 மணி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...வங்காளதேசம் முன்னாள் தலைமை நீதிபதிக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை
Next Story