என் மலர்

    செய்திகள்

    கோவேக்சின் தடுப்பூசி
    X
    கோவேக்சின் தடுப்பூசி

    அமெரிக்காவில் சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்த அனுமதி கோரிய பாரத் பயோடெக்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சுமார் 526 சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்தி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அமெரிக்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக  சுகாதார அமைப்பு அண்மையில் அங்கீகாரம் வழங்கி உள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, 17 நாடுகள் கோவேக்சின் தடுப்பூசியை செலுத்த அனுமதி அளித்துள்ளன. 

    இந்நிலையில், அமெரிக்காவில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்துவதற்கு பாரத் பயோடெக் நிறுவனம் அனுமதி கோரி உள்ளது. இத்தகவலை பாரத் பயோடெக் நிறுவனத்தின் பங்குதாரர் நிறுவனமான ஒகுஜென் தெரிவித்துள்ளது.

    2 வயது முதல் 18 வயது வரை உள்ள சுமார் 526 சிறுவர்களுக்கு 28 நாட்கள் இடைவெளியில் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ததில், நல்ல பலன் அளித்துள்ளது. எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. இதன் அடிப்படையில் அமெரிக்க அரசிடம் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×