search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவேக்சின்"

    • பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி தேசிய தடுப்பூசி திட்டத்தின் பயன்பாட்டில் உள்ளது.
    • கோவேக்சின் பூஸ்டர் டோஸ் டெல்டா, ஒமைக்ரான் வைரஸ்களுக்கு எதிரான நோயின் தீவிரத்தை குறைக்கிறது.

    புதுடெல்லி :

    டெல்டா, ஒமைக்ரான் வகை வைரஸ்களுக்கு எதிரான செயல்திறனை கோவேக்சின் பூஸ்டர் டோஸ் அதிகரிக்கிறது என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக முற்றிலும் உள்நாட்டில் கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி, அது தேசிய தடுப்பூசி திட்டத்தின் பயன்பாட்டில் உள்ளது.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்), பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான கோவேக்சின் தடுப்பூசி பற்றிய ஒரு ஆராய்ச்சியை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. டெல்டா-ஒமைக்ரானுக்கு எதிராக... இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    கோவேக்சின் தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது டோஸ் செலுத்தியதன் பாதுகாப்பு செயல்திறன் சிரியாவின் வெள்ளெலி மாதிரியைக் கொண்டு (மனிதன் தொடர்பான நோய்களை ஆராய உதவும் விலங்கு மாதிரி) ஆராயப்பட்டது.

    இதில், கோவேக்சின் தடுப்பூசியின் 2-வது டோஸ் மற்றும் 3-வது டோஸ் (பூஸ்டர் டோஸ்) செயல் திறனை ஆராய்ந்ததில், இது டெல்டா வைரசுக்கு எதிரான செயல்திறனை மேம்படுத்துகிறது. ஒமைக்ரான் வகைகளான பிஏ.1.1 மற்றும் பி.ஏ.2 ஆகியவற்றுக்கு எதிராக பாதுகாப்பை அளிக்கிறது என தெரிய வந்துள்ளது. நோய் எதிர்ப்பு பதிலளிப்பு, மருத்துவ பலன் கண்காணிப்புகள், வைரஸ் அளவு குறைதல், நுரையீரல் நோயின் தீவிரம் ஆகியவை ஆராயப்பட்டன.

    டெல்டா வைரஸ் தொற்று ஆராய்ச்சியில், 2-வது மற்றும் 3-வது டோஸ்களுக்கு இடையேயான பாதுகாப்பு பதிலளிப்பை ஒப்பிட்டு பார்த்ததில், பாதுகாப்பில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் செயல்திறன் உணரப்பட்டது. நுரையீரல் நோய் தீவிரம், 3 டோஸ் தடுப்பூசிக்கு பின் மேலும் குறைந்தது. டெல்டா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறனை குறிக்கும் 2-வது மற்றும் 3-வது டோஸ் தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தி ஆராய்ந்ததில், வைரஸ் சுமை குறைந்தது.

    ஒமைக்ரான் வைரஸ்களான பிஏ.1.1 மற்றும் பி.ஏ.2 ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்பு பதிலளிப்பை ஆய்வு செய்ததில், 3-வது டோஸ் செலுத்திய பிறகு வைரஸ் சுமை குறைந்தது தெரியவந்தது. தற்போதைய ஆராய்ச்சியின் முடிவு, கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியானது, டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ்களுக்கு எதிரான நோயின் தீவிரத்தை குறைக்கிறது. பாதுகாப்பு நோய் எதிர்ப்பு பதிலளிப்பை விரிவுபடுத்துகிறது என தெரிய வந்துள்ளது.

    இவ்வாறு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

    ×