search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cleaned"

    • சீதளி குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
    • இந்த கோரிக்கைகள் அைனத்தும் நிறைவேற்றப்படும் என்று பேரூராட்சி மன்றத் தலைவர் உறுதி அளித்தார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் கோகிலாராணி தலைமையில் நடந்தது. துணை தலைவர் கான் முகமது முன்னிலை வகித்தார்.செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் வரவு-செலவு கணக்கு அறிக்கையை கவுன்சிலர்களுக்கு வழங்கி வாசித்தார்.

    தொடர்ந்து மன்ற உறுப்பினர்கள் பிளாசா ராஜேஸ்வரி சேகர், சாந்தி சோமசுந்தரம் ஆகியோர் தலைவரிடம் மனு அளித்தனர். அதில் பொதுமக்கள் சுகாதாரம் கருதி சீதளி குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    மேலும் 1-வது வார்டு கவுன்சிலர் ராபின் சையது திருப்பத்தூரில் அம்பேத்கர் சிலை வைக்க கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கைகள் அைனத்தும் நிறைவேற்றப்படும் என்று பேரூராட்சி மன்றத் தலைவர் உறுதி அளித்தார்.

    இந்த கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் ஷமீம் நவாஸ், ஏகாம்பாள் கணேசன், ரெமி சுலைமான் பாதுஷா, நாகமீனாள் திருஞானசம்பந்தம், அபுதாஹிர், சரண்யா ஹரி, சீனிவாசன், நேரு, சரவணன், கண்ணன், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மணலை எந்த சூழ்நிலையம் எடுத்து வெளியே கொண்டு செல்லக்கூடாது.
    • தண்ணீர் வரும் கால்வாய்களை பராமரிப்பு செய்ய வேண்டும்.

    உடன்குடி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச் சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு உடன்குடி வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட சடையனேரிகுளம், தாங்கை குளம், தருவைகுளம் மற்றும் ஊர் கூடி ஊரணி அமைப்போம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய குளங்கள், குட்டைகள் ஆகியவற்றை மழை காலங்களுக்கு முன்பு முழுமையாக பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்.

    இவைகளுக்கு தண்ணீர் வரும் கால்வாய்களையும் பராமரிப்பு செய்ய வேண்டும். இங்கே எடுக்கப் படும் மணலை கரையில் வைத்து கரையை உயர்த்த வேண்டும். அங்குள்ள மணலை எந்த சூழ்நிலையம் எடுத்து வெளியே கொண்டு செல்லக்கூடாது. இப்பகுதியில் உள்ள மண் வளம் மற்றும் மணல் பாதுகாக்க பட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் கழுமலையாறு படித்துறையை தூர்வாரி சீரமைத்து கொடுத்த விவசாயிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் கழுமலையாறு உள்ளது. இந்த ஆற்றை நம்பி தில்லைவிடங்கன், திட்டை, திருத்தோணிபுரம், தென்பாதி, சீர்காழி, அகணி, கொண்டல், வள்ளுவக்குடி, நிம்மேலி, மருதங்குடி, கைவிளாஞ்சேரி உள்ளிட்ட கிராஙம்களை சேர்ந்த விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் கழுமலையாறு சீர்காழி நகர் பகுதியின் வடிகாலாகவும் இருந்து வருகிறது.

    இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் எதிரில் மயிலாடுதுறை சாலையில் கழுமலையாற்றில் இரு புறமும் படித்துறை இருந்து வந்தது. இதனை சீர்காழி, தென்பாதி மற்றும் நகர்வாசிகள் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் பயன் படுத்தி வந்தனர். ஆனால், காலப்போக்கில் படித்துறை முறையாக பராமரிக்கப்படாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு படித்துறை மண்ணை போட்டு மூடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்கள் கழுமலையாற்றில் உள்ள படித்துறையை சீரமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் இதுநாள் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றி படித்துறையை சீரமைக்காததால் நேற்று கழுமலையாறு பாசன சங்கம் சார்பில் விவசாயிகள் படித்துறைக்கு செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கடந்த 10 ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்திருந்த படித்துறையை சீரமைத்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் படித்துறையை சீரமைத்து கொடுத்த விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

    தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தை மாணவ-மாணவிகள் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் தூய்மையே சேவை திட்டம் நடந்து வருகிறது. அதன்படி பல்வேறு பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் தொடர்பாக மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு குறு நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள் நடத்தப்பட்டன.

    இதன் தொடர்ச்சியாக நேற்று காலை தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் வையாபுரி தலைமை தாங்கி, சுத்தம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த பணியில் பங்கேற்றவர்கள் தூய்மை இயக்க உறுதிமொழி ஏற்றனர். தூய்மை பணியில் பங்கேற்றவர்களுக்கு துறைமுகம் சார்பில் டி-சர்ட் வழங்கப்பட்டது. தொடர்ந்து பழைய பஸ் நிலையம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக செயலாளர் ஈசுராய், நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி சாந்தி, போக்குவரத்து மேலாளர் ராஜேந்திரன், துணை தலைமை என்ஜினீயர் ரவிக்குமார், டாக்டர் ஜோசப் சுந்தர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
    ×