என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் கோகிலாராணி தலைமையில் நடந்தது.
சீதளி குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும்
- சீதளி குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
- இந்த கோரிக்கைகள் அைனத்தும் நிறைவேற்றப்படும் என்று பேரூராட்சி மன்றத் தலைவர் உறுதி அளித்தார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் கோகிலாராணி தலைமையில் நடந்தது. துணை தலைவர் கான் முகமது முன்னிலை வகித்தார்.செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் வரவு-செலவு கணக்கு அறிக்கையை கவுன்சிலர்களுக்கு வழங்கி வாசித்தார்.
தொடர்ந்து மன்ற உறுப்பினர்கள் பிளாசா ராஜேஸ்வரி சேகர், சாந்தி சோமசுந்தரம் ஆகியோர் தலைவரிடம் மனு அளித்தனர். அதில் பொதுமக்கள் சுகாதாரம் கருதி சீதளி குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் 1-வது வார்டு கவுன்சிலர் ராபின் சையது திருப்பத்தூரில் அம்பேத்கர் சிலை வைக்க கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கைகள் அைனத்தும் நிறைவேற்றப்படும் என்று பேரூராட்சி மன்றத் தலைவர் உறுதி அளித்தார்.
இந்த கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் ஷமீம் நவாஸ், ஏகாம்பாள் கணேசன், ரெமி சுலைமான் பாதுஷா, நாகமீனாள் திருஞானசம்பந்தம், அபுதாஹிர், சரண்யா ஹரி, சீனிவாசன், நேரு, சரவணன், கண்ணன், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.