search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chives"

    • சிகைக்காய் உபயோகித்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.
    • தலைமுடியில் உள்ள வேர்களில் படுமாறு நன்றாக தேய்க்க வேண்டும்.

    முடி உதிர்வது என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் ஒரு சில சின்ன வெங்காயம் இருந்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கட்டிவிடலாம் என்று கூறப்படுகிறது.

    சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து அதில் தண்ணீர் சேர்க்காமல் பசை போல் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள சாறை பிழிந்து அதனை தலைமுடியில் உள்ள வேர்களில் படுமாறு நன்றாக தேய்க்க வேண்டும்.

    பத்து நிமிடம் மசாஜ் செய்த பின் ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு அதன் பிறகு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். கண் எரிச்சல் சிறிது இருந்தாலும் எந்த விதமான அலர்ஜியும் ஏற்படாது.

    இதனுடன் எலுமிச்சை சாறு அல்லது புதினா சேர்த்தும் தலையில் தடவலாம். தொடர்ந்து ஆறு மாதத்திற்கு இதை பயன்படுத்தி வருபவர்கள் முடி உதிர்வு குறைத்துள்ளதாக பல சமூக வலைதளங்களில் எழுதி பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போதைய நவநாகரிக உலகில் கூந்தலுக்கு ஷாம்புகள் போடுவதால் தான் முடி கொட்டும் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றும் சிகைக்காய் உபயோகித்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஷாம்புகள் அனைத்துமே ரசாயன கலப்புகள் இருக்கும் என்பதால் நமது பாரம்பரிய சிகைக்காய் தூளை பயன்படுத்தினால் உச்சந்தலை குளிர வைத்து உடல் சூட்டை குறைப்பது மட்டுமின்றி கூந்தலுக்கும் பளபளப்பை தரும் என்றும் முடி கொட்டும் பிரச்சனை இருக்காது என்றும் கூறப்படுகிறது.

    ஷாம்புகளை பயன்படுத்தினால் பக்க விளைவுகளை ஏற்படும் ஆனால் சிகைக்காய் பயன்படுத்தினால் எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முடிஉதிர்வு பிரச்சினை மன உளைச்சலை ஏற்படுத்திவிடும்.
    • வழுக்கை விழுந்த தலையில் கூட முடிவளரும்.

    பொதுவாக தலைமுடி உதிர்வதை ஒரு வயதிற்கு மேல் நம்மால் நிறுத்தமுடியாது. குழந்தைப்பேறு, வயோதிகம், உடல்நலப்பிரச்சினை, சத்துக்கள் குறைவது போன்ற காரணங்களால் முடி உதிர்வை தடுக்க முடியாது. பலபேருக்கு அதுவே மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். இப்படி முடி அதிகமாக கொட்டுகிறதே என்ன செய்வது என்று புரியாமல் யோசித்துக்கொண்டு இருப்பார்கள்.

    கைமேல் பலன் தரக்கூடிய மிக அருமையான தீர்வை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். வழுக்கை விழுந்த தலையில் கூட முடிவளரும் அளவுக்கு இந்த தீர்வு இருக்கும். நமது வீட்டு அடுப்படியில் இருக்கும் சின்ன வெங்காயம் தான் இந்த தீர்வை தருகிறது. இதில் இருக்கக்கூடிய சல்பர் தான் முடிவளச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

    சல்பர் நம் தலையில் ஏற்படக்கூடிய புண், பொடுகு மற்றும் முடிகொட்டுவதற்கு காரணமான தொற்றுகளை அழிப்பதற்கு இந்த சல்பர் உதவுகிறது. இந்த சின்னவெங்காயத்தை எவ்வாறு பயன்படுத்வேண்டும் என்றால் இதனை நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பசைபோல் அரைத்து எடுக்க வேண்டும்.

    இதில் உள்ள சாறினை பிழிந்து எடுத்து அதனை தலையில் உள்ள முடிகள் மற்றும் அதன் வேர்களில் படுமாறு நன்றாக தேய்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் ஒரு 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதன்பிறகு ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். புண். பொடுகுத்தொல்லை இருப்பவர்கள் கொஞ்சம் அரிப்பு காணப்படும். அதை பொறுத்துக்கொண்டு ஒருமணிநேரம் ஊறவைக்க வேண்டும். கண் எரிச்சல் இருக்கும் அதனால் எந்த பிரச்சினையும் ஏற்படாது. அதன்பிறகு ஒரு மைல்டான ஷாம்பு போட்டு தலைமுடியை அலச வேண்டும்.

    சிலர் எனக்கு சளித்தொல்லை, சைனஸ் பிரச்சினை இருக்கிறது. நாங்கள் எப்படி ஊறவைத்து குளிப்பது என்று கேட்கலாம். அவர்களை இந்த சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து தடவுவதற்கு பதிலாக அவர்கள் சின்ன வெங்காயத்தை சிறிதளவு ஒன்றிரண்டாக தட்டி அதனை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி அதனை தடவி வரலாம்.

    இதனுடன் சேர்த்து எலுமிச்சை சாறு அல்லது புதினா சாறு ஆகியவற்றையும் தலையில் தடவி வரலாம். இதனை சாறு எடுத்து தடவி வந்தால் மட்டுமே முடியில் எந்த வெங்காய சக்கைகளும் படியாமல் இருக்கும். இதனை தொடர்ந்து ஒரு 6 மாதத்திற்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வது குறைந்து முடிவளர ஆரம்பிக்கும். முடி இல்லாமல் வழுக்கை விழுந்தவர்கள் கூட தொடர்ந்து இந்த மாதிரி பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை பெறலாம்.

    • வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து இன்று உச்சகட்ட விலையாக தரமான சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனையானது.
    • தக்காளி, வெங்காயத்தைப் போன்றே காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மார்க்கெட்டாகும். இந்த மார்கெட்டிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒட்டன்சத்திரத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் இங்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து கேரளாவின் அனைத்து பகுதிகளுக்கும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் சில்லறை விற்பனைக்காகவும் மொத்த விற்பனைக்காகவும் ஏற்றுமதியாவது வழக்கம்.

    இதனால் தினந்தோறும் இந்த மார்க்கெட்டில் சுமார் ரூ.5 முதல் ரூ.7 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்து போன காரணத்தாலும், அதிகப்படியாக வெயிலின் தாக்கத்தாலும், ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளில் சின்ன வெங்காயம் வரத்து இல்லாமல் போனது.

    இதனால் வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து இன்று உச்சகட்ட விலையாக தரமான சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனையானது. தினந்தோறும் ஒவ்வொரு கடைகளுக்கும் 50 டன் வரக்கூடிய சின்ன வெங்காயம் தற்போது ஒரு டன் அளவு கூட வராமல் குறைந்துள்ளது. இதுவே விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த வெங்காயம் இங்கிருந்து வண்டி வாடகை, ஏற்று கூலி மற்றும் இதர செலவுகள் என சில்லறை விலையில் ரூ.200ஐ தாண்டி விற்பனையாகிறது. இதனால் அன்றாட தேவைக்கு வாங்கி பயன்படுத்தும் பொதுமக்கள் பாதிப்படையக் கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே தக்காளி விலை உயர்வால் அதனை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து அரசு தற்போது ரேஷன் கடைகளில் ரூ.60க்கு விற்பனை செய்து வருகிறது. அதேபோல் சின்ன வெங்காயத்தையும் கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் ஒரு மாத காலத்திற்கு இருக்கும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தக்காளி, வெங்காயத்தைப் போன்றே காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

    • உலகளவில் மிகுதியாக வெங்காய உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
    • மலேசியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கோவை,

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

    உலகளவில் மிகுதியாக வெங்காய உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகியவை சின்ன வெங்காயம் பயிரிடும் முக்கிய மாநிலங்களாகும்.

    தமிழ்நாட்டில், திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

    சின்ன வெங்காயம் உற்பத்தியில் அதிக பங்கு உள்நாட்டு நுகர்வுக்கே பயன்படுவதால் உள்நாட்டு தேவைக்கு ஏற்ப கர்நாடகா ஆந்திரபிரதேசத்திலிருந்து சின்ன வெங்காயம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    தமிழ்நாட்டில் இருந்து சின்ன வெங்காயம், மேற்கு ஆசியா, இலங்கை, பங்களதேஷ், மலேசியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்தியாவில், சின்ன வெங்காயத்தின் முக்கிய உற்பத்தியாளராக தமிழ்நாடு உள்ளது. தற்போது திருச்சி மற்றும் திண்டுக்கல் சந்தைக்கு பெரம்பலூர், தாராபுரம், பல்லடம் ஆகிய இடங்களிலிருந்தும் மற்றும் கர்நாடகாவிலிருந்தும் சின்ன வெங்காயம் வரத்து உள்ளது.

    விலை முன்னறிவிப்பு திட்டமானது, கடந்த 23 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயம் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

    ஆய்வுகளின் அடிப்படையில், தரமான சின்ன ெவங்காயத்தின் சராசரி பண்ணை விலை அறுவடையின் போது (மே முதல் ஜூன் வரை) கிலோ ரூ.30 முதல் ரூ.32 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் சந்தை அடிப்படையில், விற்பனை முடிவுகளை எடுக்கலாம் என பரிந்துரைக்கப்படுகின்றனர்.

    ×