search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cane"

    • அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
    • பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து ரோட்டில் விழுந்து கிடந்த கரும்புகளை அகற்றினர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்துள்ள சுற்று வட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த கரும்பானது சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் ஆலைக்கு எடுத்து செல்வது வழக்கம்.

    இதேபோல் சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள வெள்ளாள பாளையம் பகுதியில் இருந்து வந்த கரும்பு லாரி அதிக பாரம் ஏற்றி வந்ததால் சத்தியமங்கலம்-அத்தாணி செல்லும் சாலையில் சத்தியமங்கலம் முக்கிய வீதியில் கரும்பு பாரம் திடீரென ரோட்டில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    ஆனாலும் நடுரோட்டில் கரும்பு சரிந்து விழுந்ததால் சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து ரோட்டில் விழுந்து கிடந்த கரும்புகளை அகற்றினர்.

    பிறகு சிறிது நேரத்தில் கரும்புகளை முற்றிலு மாக அகற்றி கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை தனியார் ஆலைக்கு அனுப்பி வைத்தனர்.

    • பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 3 லட்சத்து 43 ஆயிரம் டன் கரும்பு அருவை செய்யப்பட்டது
    • வெளி ஆலைக்கு 17 ஆயிரத்து 423 டன் அனுப்பப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் கிராமத்தில் பெரம்பலூர் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 2022-23-ம் ஆண்டிற்கான கரும்பு அரவை பணி கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி தொடங்கியது. கரும்பு அரவை பணி நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. 144 நாட்களில் சுமார் 3 லட்சத்து 43 ஆயிரத்து 772 டன் கரும்பு அரைக்கப்பட்டிருக்கிறது. ஆலையில் சுமார் 3 லட்சத்து 29 ஆயிரத்து 104 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வெளி ஆலைக்கு 17 ஆயிரத்து 423 டன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கரும்பு விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத வகையில் உடனுக்குடன் பணம் வழங்க ஆணையிட்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சருக்கும் அனைத்து கரும்பு விவசாயிகள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.

    • நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்குவதாக கூறினர்.
    • சாக்குகளில் நெல் அள்ள ஒரு சாக்கிற்கு ரூ.5, தூற்றி போட்டால் ரூ.50, தூற்றாமல் போட்டால் ரூ.60 என வசூல் செய்யப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கோட்டாட்சியர் (பொறுப்பு ) பழனிவேல் தலைமை தாங்கினார்.

    இதில் தஞ்சாவூர், பூதலூர் ,ஒரத்தநாடு, திருவையாறு பகுதிகளை சிறந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ரவிசந்தர் மற்றும் நிர்வாகிகள் முகமூடி அணிந்து அதாவது கொள்ளையர்கள் போல் முகமூடி அணிந்து வந்து நூதன முறையில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் வாக்குறுதியாக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்குவதாக கூறிய நிலையில் மூன்றாம் ஆண்டு வேளாண்மை பட்ஜெட்டில் அது குறித்து எந்த அறிவிப்பும் செய்யாதது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியது.

    தஞ்சை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ரூ.50 வீதம் ஒரு 40 கி சிப்பத்திற்கு கட்டாய லஞ்சம் பெறப்படுகிறது .

    மேலும் சாக்குகளில் நெல் அள்ள ஒரு சாக்கிற்கு ரூ.5, தூற்றி போட்டால் ரூ.50, தூற்றாமல் போட்டால் ரூ.60 என வசூல் செய்யப்படுகிறது.

    இது குறித்து நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை.

    எனவே லஞ்ச ஒழிப்பு துறையோடு இணைந்து கள்ள சாராய ஒழிப்பு, அனுமதி இல்லாமல் மதுபாட்டில் விற்றல் போன்ற நடவடிக்கைகளில் பறக்கும் படை அமைத்து செயலாற்றுவது போல கொள்முதல் நிலைய லஞ்சத்தையும், முறைகேடுகளையும் தடுக்க வேண்டும்.

    இதற்காகத்தான் கொள்ளையர்கள் அணியும் முகமூடி அணிந்து மனு கொடுத்துள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10 ஏக்கர் கரும்பு தோட்டம் எரிந்து நாசமானது.
    • இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது

    கரூர்

    கிருஷ்ணராயபுரம் அருகே பாப்பாயம்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து உள்ளனர். இந்தநிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கர் பரப்பளவு உள்ள கரும்பு தோட்டத்தில் மின் கம்பி உரசியதில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், கரும்புத்தோட்டம் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் பீதியடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து, கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் 10 ஏக்கர் கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அறுவடைக்கு கரும்புகள் தயார் ஆகிறது.
    • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலைவாசி உயர்வு காரணமாக சற்று கூடுதல் விலைக்கு விற்பனை ஆகும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
    புதுக்கோட்டை:


    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரு வார காலமே உள்ள நிலையில், வடகாடு அருகேயுள்ள நெடுவாசல் பகுதியில் ஒரு சில விவசாயிகள் மூலமாக, நடவு செய்துள்ள செங்கரும்புகள் தற்சமயம் அறுவடை செய்ய தயாராக உள்ளது. கடந்த ஆண்டுகளில் இப்பகுதியில் விளைந்த செங்கரும்புகள் பத்து கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று விவசாய தோட்டங்களில் ரூ.150 வரை விற்பனை ஆனது. மேலும் சரக்கு வேன் மூலமாக, வாங்கி சென்ற வியாபாரிகள் கடைகள் மற்றும் பொது இடங்களில் கொண்டு சென்று கட்டு ஒன்று ரூ.200 மற்றும் ரூ.250 வரை பேரம் பேசி விற்பனை செய்து வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலைவாசி உயர்வு காரணமாக சற்று கூடுதல் விலைக்கு விற்பனை ஆகும் எனவும் இப்பகுதி செங்கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.


    • பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று கரும்பு வழங்கப்படுகிறது.
    • மதுரை விமான நிலையத்திற்கு வந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அவனியாபுரம்

    சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் பொங்கல் தொகுப்புடன் கரும்பையும் சேர்த்து வழங்கியதற்கு காரணம் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க.வின் போராட்டத்திற்கு பயந்து அல்ல.

    2 கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரர் களுக்கு முழுமையாக ரூ.1000த்துடன் பொங்கல் தொகுப்பு மற்றும் கரும்பு இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் முறையாக கிடைக்கும். அதில் எந்த தங்கு தடை இருக்காது. அமைச்சரவை மாற்றம் என்பது முதல்வரின் முடிவு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மதுரை மாநகர் விவசாய அணி துணை அமைப்பாளர் மாணகிரி குணசேகர்,ஜெய ஹிந்துபுரம் நாகராஜன் உள்பட பலர் இருந்தனர்

    ×