search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைதீர் கூட்டத்தில் முகமூடி அணிந்து மனு கொடுத்த விவசாயிகள்- பரபரப்பு
    X

    தஞ்சை வருவாய் கோட்டாட்சியரிடம் முகமூடி அணிந்து மனு கொடுத்த விவசாயிகள்.

    குறைதீர் கூட்டத்தில் முகமூடி அணிந்து மனு கொடுத்த விவசாயிகள்- பரபரப்பு

    • நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்குவதாக கூறினர்.
    • சாக்குகளில் நெல் அள்ள ஒரு சாக்கிற்கு ரூ.5, தூற்றி போட்டால் ரூ.50, தூற்றாமல் போட்டால் ரூ.60 என வசூல் செய்யப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கோட்டாட்சியர் (பொறுப்பு ) பழனிவேல் தலைமை தாங்கினார்.

    இதில் தஞ்சாவூர், பூதலூர் ,ஒரத்தநாடு, திருவையாறு பகுதிகளை சிறந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ரவிசந்தர் மற்றும் நிர்வாகிகள் முகமூடி அணிந்து அதாவது கொள்ளையர்கள் போல் முகமூடி அணிந்து வந்து நூதன முறையில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் வாக்குறுதியாக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்குவதாக கூறிய நிலையில் மூன்றாம் ஆண்டு வேளாண்மை பட்ஜெட்டில் அது குறித்து எந்த அறிவிப்பும் செய்யாதது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியது.

    தஞ்சை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ரூ.50 வீதம் ஒரு 40 கி சிப்பத்திற்கு கட்டாய லஞ்சம் பெறப்படுகிறது .

    மேலும் சாக்குகளில் நெல் அள்ள ஒரு சாக்கிற்கு ரூ.5, தூற்றி போட்டால் ரூ.50, தூற்றாமல் போட்டால் ரூ.60 என வசூல் செய்யப்படுகிறது.

    இது குறித்து நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை.

    எனவே லஞ்ச ஒழிப்பு துறையோடு இணைந்து கள்ள சாராய ஒழிப்பு, அனுமதி இல்லாமல் மதுபாட்டில் விற்றல் போன்ற நடவடிக்கைகளில் பறக்கும் படை அமைத்து செயலாற்றுவது போல கொள்முதல் நிலைய லஞ்சத்தையும், முறைகேடுகளையும் தடுக்க வேண்டும்.

    இதற்காகத்தான் கொள்ளையர்கள் அணியும் முகமூடி அணிந்து மனு கொடுத்துள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×