search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CSKvKKR"

    • விராட் கோலி 110 கேட்ச்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
    • சுரேஷ் ரெய்னா 109 கேட்ச்கள் பிடித்து 2-வது இடத்தில் உள்ளார்

    சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

    ஜடேஜா அபாரமாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்தினார். அத்துடன் சால்ட் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் அடித்த பந்தை கேட்ச் பிடித்தார்.

    இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 கேட்ச்களை பிடித்து அசத்தியுள்ளார். 100 கேட்ச்கள் பிடித்து 5-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    விராட் கோலி 110 கேட்ச்கள் பிடித்து முதல் இடத்தில் உள்ளார். சுரேஷ் ரெய்னா 109 கேட்ச்கள் பிடித்து 2-வது இடத்தில் உள்ளார். பொல்லார்டு 103 கேட்ச்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 98 கேட்களுடன் 6-வது இடத்தில் உள்ளார்.

    • ஜடேஜா 4 ஓவரில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
    • தேஷ்பாண்டே 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிலிப் சால்ட், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தேஷ்பாண்டே வீசினார். முதல் பந்திலேயே சால்ட் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    அடுத்து சுனில் நரைன் உடன் இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி களம் இறங்கினார். முதல் ஓவரில் கொல்கத்தா ஒரு ரன் மட்டுமே எடுத்தது. 2-வது ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்தது.

    தேஷ்பாண்டே வீசிய 3-வது ஓவரில் 19 ரன்கள் விளாசியது. 4-வது ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. 5-வது ஓவரில் 13 ரன்கள் கிடைக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 ஓவரில் 50 ரன்கள் குவித்தது.

    இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 200 ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 7-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் ஜடேஜா திருப்புமுனை ஏற்படுத்தினார். முதல் பந்திலேயே ரகுவன்ஷியை எல்.பி.டபிள்யூ மூலம் வீழ்த்தினார். ரகுவன்ஷி 18 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே ஓவரின் 5-வது பந்தில் சுனில் நரைனை வீழ்த்தினார். அவர் 20 பந்தில் 27 ரன்கள் எடுத்து தீக்சனாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    அதன்பின் கொல்கத்தா நைட் ரைடஸ் ரன்கள் அடிக்க திணறியது. ஜடேஜா மேலும் வெங்களடேஷ் அய்வரை 3 ரன்னில் வீழ்த்தினார். கொல்கத்தா நைட் ரைடர் 15.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

    இதனால் 200 ரன்களை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 150 ரன்னைத் தாண்டுமா? என்ற நிலை ஏற்பட்டது. ரிங்கு பாண்டு கடைசி நேரத்தில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    16.5-வது ஓவரில் அந்த்ரே ரஸல் களம் இறங்கினார். 18-வது ஓவரை முஸ்தாபிஜுர் ரஹ்மான் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே விட்டுக்கொடுத்தார். கொல்கத்தா அணியால் இந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. நோ-பால் பந்துடன் சேர்த்து ரஸல் 6 பந்துகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

    19-வது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் அந்த்ரே ரஸல் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணிக்கு இந்த ஓவரில் 13 ரன் கிடைத்தது.

    135 ரன்கள் எடுத்த நிலையில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் வீசிய கடைசி ஓவரை கொல்கத்தா எதிர்கொண்டது. முதல் பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே சேர்க்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. முஸ்தாபிஜூர் ரஹ்மான் 4 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    • சி.எஸ்.கே. முதல் 2 ஆட்டத்தில் சொந்த மண்ணில் வென்ற பிறகு அடுத்த 2 போட்டிகளில் வெளியூரில் தோற்றது.
    • கடந்த 2 போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கும், பந்துவீச்சும் மிகவும் மோசமாக இருந்தது.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் 7 லீக் ஆட்டம், குவாலிபையர்-2 மற்றும் இறுதிப்போட்டி ஆகிய 9 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். போட்டியின் தொடக்க விழாவே சேப்பாக்கத்தில் தான் நடைபெற்றது. கடந்த 22-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. 26-ந் தேதி நடைபெற்ற 2-வது போட்டியிலும் சி.எஸ்.கே. வெற்றி பெற்றது. குஜராத்தை 63 ரன்னில் தோற்கடித்தது.

    சேப்பாக்கம் மைதானத்தில் 3-வது ஐ.பி.எல். ஆட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த கோலாகலத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சி.எஸ்.கே. முதல் 2 ஆட்டத்தில் சொந்த மண்ணில் வென்ற பிறகு அடுத்த 2 போட்டிகளில் வெளியூரில் தோற்றது. விசாகப்பட்டினத்தில் கடந்த 31-ந் தேதி நடந்த போட்டியில் டெல்லியிடம் 20 ரன் வித்தியாசத்திலும், ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இதுவரை நடந்த 3 ஆட்டத்திலும் கொல்கத்தா தோல்வியை தழுவாமல் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியை வீழ்த்துவது சவாலானது.

    கடந்த 2 போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கும், பந்துவீச்சும் மிகவும் மோசமாக இருந்தது. கொல்கத்தா போன்ற பலமான அணியுடன் விளையாடும் போது அதில் இருந்து மீள்வது அவசியமாகும். சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் இந்த ஆட்டத்தை ஆவலுடன் கோலாகலத்துக்காக காத்திருக்கிறார்கள்.

    உள்ளூர் ரசிகர்கள் ஆதரவால் சேப்பாக்கத்தில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் வேட்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்கிறது. பேட்டிங்கில் ஷிவம் துபே தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த போட்டியில் விளையாடாத முஸ்டாபிசுர் ரகுமான் நாளைய ஆட்டத்தில் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    2 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த சீசனில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சுனில் நரேன், ஆந்த்ரே ரஸ்சல், பில்சால்ட், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், புதுமுக வீரர் ரகுவன்சி, வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கிலும், ஹர்திக் ரானா, வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் 28 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 18-ல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10-ல வெற்றி பெற்றுள்ளன. 

    • முதலில் ஆடிய சென்னை 144 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய கொல்கத்தா 147 ரன்கள் எடுத்து வென்றது.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் தூபே 34 பந்துகளில் 48 ரன்களை எடுத்தார். டேவன் கான்வே 30 ரன்னும், ஜடேஜா 20 ரன்னும் எடுத்தனர்.

    கொல்கத்தா சார்பில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், வைபவ் அரோரா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. முன்னணி வீரர்களை தீபக் சாஹர் விரைவில் வெளியேற்றினார்.

    இதனால் 33 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா திணறியது. அடுத்து இறங்கிய கேப்டன் நிதிஷ் ராணா, ரிங்கு சிங் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

    4வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்த நிலையில் ரிங்கு சிங் 54 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், கொல்கத்தா 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்து வென்றது. நிதிஷ் ராணா 57 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    சென்னை சார்பில் தீபக் சாஹர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று இரவு கொல்கத்தா நைட் ரைடர்சை சந்திக்கிறது.
    • மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதல் ஜெய்ப்பூரில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும்.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில், இன்று 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 61-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது.

    எம்.எஸ்.டோனி தலைமையிலான சென்னை அணி நடப்பு தொடரில் 12 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

    சென்னை அணி சொந்த மண்ணில் மும்பை, டெல்லி அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்த கையோடு இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    சென்னை அணியில் பேட்டிங்கில் டேவன் கான்வே (5 அரைசதத்துடன் 468 ரன்கள்), ருதுராஜ் கெய்க்வாட் (408 ரன்கள்), ஷிவம் துபே, ரகானேவும், பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே (19 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (16 விக்கெட்), பதீரனா, மொயீன் அலி, தீக்ஷனாவும் அசத்தி வருகிறார்கள். கொல்கத்தாவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் சென்னை அணி கூடுதல் நம்பிக்கையுடன் செயல்படும்.

    நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் சரண் அடைந்ததால் அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்த கொல்கத்தா அணி எஞ்சிய ஆட்டங்களை வெற்றிகரமாக முடித்து ஆறுதல் அடைய முயற்சிக்கும்.

    அந்த அணியில் பேட்டிங்கில் வெங்கடேஷ் அய்யர் (371 ரன்கள்), ரிங்கு சிங் (353 ரன்கள்), கேப்டன் நிதிஷ் ராணா (348 ரன்கள்) ஜேசன் ராய், ரமனுல்லா குர்பாசும், பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் ஷர்மா, ஆந்த்ரே ரஸ்செல், சுனில் நரைனும் அச்சுறுத்தல் அளிக்கக் கூடியவர்கள். அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஒருசேர எடுபடாதது பின்னடைவாக உள்ளது.

    சென்னை அணியை பொறுத்தமட்டில் இந்த ஆட்டத்தில் வாகை சூடினால் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை உறுதி செய்து விடலாம் என்பதால் வெற்றிக்காக எல்லா வகையிலும் வரிந்து கட்டும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க கொல்கத்தா அணியும் போராடும். எனவே இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    சொந்த மண்ணில் நடைபெறும் கடைசி லீக்கான இதனை வெற்றியுடன் முடித்து ஆதிக்கத்தை தொடரும் ஆவலுடன் இருக்கும் சென்னை அணிக்கு உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவும் பக்கபலமாக இருக்கும்.

    மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதல் முன்னதாக ஜெய்ப்பூரில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும். சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 575 ரன்கள்), ஜோஸ் பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மயரும், பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஸ்வின், டிரென்ட் பவுல்ட், சந்தீப் ஷர்மாவும் நல்ல பார்மில் இருக்கின்றனர்.

    பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளியுடன் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் கேப்டன் பிளிஸ்சிஸ் (576 ரன்கள்), விராட் கோலி (420 ரன்கள்) மேக்ஸ்வெல்லும், பந்து வீச்சில் முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், ஹசரங்கா, கரண் ஷர்மா, விஜய்குமார் வைஷாக்கும் வலுசேர்க்கிறார்கள்.

    இந்த ஆட்டம் இரு அணிக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இரு அணிகளும் தங்களது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த பலப்பரீட்சையில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் இடையேயான ஆட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறுகிறது.
    • நேற்றிரவில் இருந்து நூற்றுக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு முன் குவிந்துள்ளனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் நடைபெற உள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் இடையேயான ஆட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான டிக்கெட்டுகளும் ரூ.2,000, ரூ.2,500 டிக்கெட்டுகளும் கவுண்ட்டரிலும் விற்பனை செய்யப்படுகிறது. பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிக்கும் கணிசமான டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    முன்னதாக நேற்றிரவில் இருந்து நூற்றுக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு முன் குவிந்துள்ளனர். கட்டுகடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.

    • சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் மே 14 -ம் தேதி சேப்பாக்கத்தில் நடக்கிறது.
    • இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கும் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மே 14-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    இந்நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி, டி, இ கீழ்தளம்) டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகளை கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணைய தளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம். ரூ.3,000, ரூ.5,000 விலைக்குரிய டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்கப்படும்.

    ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாற்று திறனாளிகள், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் காலை 10.30 முதல் 11 மணி வரை டிக்கெட்டுகளை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் மே 14 -ம் தேதி சேப்பாக்கத்தில் நடக்கிறது.
    • இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்கும் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மே 14-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    இந்நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்கும் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி, டி, இ கீழ்தளம்) டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகளை கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணைய தளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம். ரூ.3,000, ரூ.5,000 விலைக்குரிய டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்கப்படும்.

    ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாற்று திறனாளிகள், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் காலை 10.30 முதல் 11 மணி வரை டிக்கெட்டுகளை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சென்னையில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை 108 ரன்னில் சுருட்டி அட்டகாசப்படுத்திய சென்னை அணி 5-வது வெற்றியை ருசித்தது. #IPL2019 #CSKvKKR

    8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 23-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சுடன் மோதியது. இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி, பனிப்பொழிவை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

    இதையடுத்து முதலில் மட்டையை பிடித்த கொல்கத்தாவுக்கு ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து பேரிடி விழுந்தது. அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் லின் (0) வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரின் (6) ஹர்பஜன்சிங்கின் சுழலில் சிக்கினார்.


    இந்த சறுக்கலில் இருந்து கொல்கத்தா அணியினரால் மீள முடியவில்லை. சென்னை கேப்டன் டோனி, வேகம்-சுழல் இரண்டையும் மாற்றி மாற்றி பயன்படுத்தி குடைச்சல் கொடுத்தார். அவரின் வியூகத்தை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா அணி விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்தது. ராபின் உத்தப்பா (11 ரன்), நிதிஷ் ராணா (0) ஆகியோரை தீபக் சாஹர் வெளியேற்ற, அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர்கள் தங்கள் பிடியை பலமாக இறுக்கினர். கேப்டன் தினேஷ் கார்த்திக் (19 ரன்), சுப்மான் கில் (9 ரன்) ஆகியோரும் தாக்குப்பிடிக்கவில்லை.

    இதற்கு மத்தியில், இந்த ஐ.பி.எல்.-ன் அபாயகரமான ஆட்டக்காரர் என்று வர்ணிக்கப்படும் ஆந்த்ரே ரஸ்செல் 8 ரன்னில் வெளியேறி இருக்க வேண்டியது. அவர் கொடுத்த அருமையான கேட்ச் வாய்ப்பை ஹர்பஜன்சிங் நழுவ விட்டார். இதே போல் அவர் 19 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது, எல்.பி.டபிள்யூ. கேட்டு டி.ஆர்.எஸ் முறைப்படி அப்பீல் செய்த போதும் பலன் கிட்டவில்லை.

    ஒரு கட்டத்தில் 79 ரன்னுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் ஊசலாடிய கொல்கத்தா அணியை மூன்று இலக்கத்தை எட்ட வைக்க கடைசி விக்கெட்டுக்கு வந்த ஹாரி குர்னேவின் துணையுடன் ரஸ்செல் தனி வீரராக போராடினார். இதனால் ஒற்றை ரன் எடுப்பதை தவிர்த்த அவர் 19-வது ஓவரில் ஒரு சிக்சரும், 20-வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரியும் விரட்டி கவுரவமான நிலையாக தங்கள் அணியை 100 ரன்களை கடக்க வைத்தார். அத்துடன் தனது அரைசதத்தையும் அவர் நிறைவு செய்தார்.

    20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சீசனில் கொல்கத்தா அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். அது மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக கொல்கத்தாவின் குறைந்த ஸ்கோராகவும் இது அமைந்தது. தனது 6-வது ஐ.பி.எல். அரைசதத்தை கடந்த ஆந்த்ரே ரஸ்செல் 50 ரன்களுடன் (44 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.

    சென்னை தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளும், ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தீபக் சாஹர் வீசிய 4 ஓவர்களில் 20 பந்தில் ரன்னே அடிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

    பின்னர் எளிய இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது. குறுகிய நேரமே நின்ற தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 17 ரன்னும் (2 பவுண்டரி, ஒரு சிக்சர்), அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 14 ரன்னும் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து நடையை கட்டினர்.

    அடுத்து வந்த வீரர்கள்நிதானமாக செயல்பட்டனர். அதே சமயம் பனிப்பொழிவின் காரணமாக கொல்கத்தா பவுலர்கள் தடுமாற்றத்துடன் பந்து வீசினர். அணியின் ஸ்கோர் 81 ரன்களை எட்டிய போது, அம்பத்தி ராயுடு 21 ரன்னில் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பாப் டு பிளிஸ்சிஸ் நிலைத்து நின்று ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

    சென்னை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு இழப்புக்கு 111 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிளிஸ்சிஸ் 43 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 8 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

    6-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 5-வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளி பட்டியலில் சென்னை அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. கொல்கத்தா அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.

    சென்னை அணி ஜெய்ப்பூரில் நாளை (வியாழக்கிழமை) நடக்கும் தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.

     #IPL2019 #CSKvKKR
    ×