என் மலர்

  நீங்கள் தேடியது "2 people died"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  பெரியகுளம்:

  போடி எடமுத்துநாயக்கர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது40). இவர் சற்று மனநலம் பாதிக்கப்ப–ட்டதால் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

  அங்கு கழிவறை ஜன்னலில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் கருணாநிதி (23). டிரைவராக வேலை பார்த்து வந்தார்.கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து சுற்றி திரிந்ததால் அவரது தாயார் கண்டித்தார்.

  இதனால் மனமுடைந்த கருணாநிதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திண்டுக்கல் ஆத்தூர் அணையில் மூழ்கி கடந்த 2 ஆண்டில் 9 பேர் பலியாகி உள்ளனர்
  • அணையில் பாதுகாப்பை மேம்படுத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்

  செம்பட்டி :

  திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர் பூஞ்சோலையை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது35). இவர்ஆத்தூர் (கிழக்கு) தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். மேலும் சித்த மருந்து விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி (30) என்ற மனைவியும் ராகுல் (8) முகேஷ் (5) ஆகிய மகன்களும் உள்ளனர்.

  கடந்த வாரம் ஆத்தூர் பூஞ்சோலையில் கோவில் திருவிழா நடைபெற்றது. இவருடைய அண்ணன் வேல்முருகன் மகள் தர்ஷினி (15) பெரியகுளத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவரும் திருவிழாவை காண வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று செல்வகுமார் நண்பர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ரவி என்பவருடைய மனைவி நாகேஸ்வரி இவரது தாயார் மற்றும் 2 குழந்தைகள், செல்வகுமார் வீட்டிற்கு வந்துள்ளனர்.

  பின்னர், இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் ஆத்தூர் காமராஜர் அணைக்கு குளிக்க சென்றனர். அப்போது, நண்பர் ரவியின் மனைவி நாகேஸ்வரி திடீரென நீரில் மூழ்கினார். இதைப்பார்த்த செல்வகுமார் அவரை காப்பாற்ற முயன்றார்.

  இதில் நாகேஸ்வரி காப்பாற்றப்பட்டார். அப்போது செல்வகுமார் மூழ்கி உயிருக்கு போராடி னார். அவரை காப்பாற்ற அவருடைய அண்ணன் மகள் தர்ஷினி நீரில் நீந்தி சென்று செல்வகுமாரை காப்பாற்ற முயன்றார். அப்போது, செல்வகுமார் மற்றும் தர்ஷினி ஆகிய 2 பேரும் நீரில் மூழ்கி சம்பவ இடத்தில் பலியானார்கள்.

  தகவலறிந்த ஆத்தூர் தீயணைப்பு படையினர் அங்கு சென்று நீரில் மூழ்கி பலியான செல்வகுமார் மற்றும் தர்ஷினி உடலை மீட்டு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுகுறித்து செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கடந்த 2 ஆண்டில் 9 பேர் ஆத்தூர் அணையில் குளிக்க சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். எனவே பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும், அறிப்பு பலகை வைத்து போலீசார் ஒருவரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  ×