என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போடி அருகே வெவ்வேறு விபத்துகளில்  2 பேர் பலி
  X

  கோப்பு படம்.

  போடி அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அவ்வழியாக வந்த டிப்பர் லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
  • இந்த 2 சம்பவங்கள் குறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மேலசொக்கநாதபுரம்:

  தேனி அருகே வீரபாண்டியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (வயது24). இவர் அர்ச்சனா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் போடி மெட்டு காத்தாடி பாறை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

  தாமரைக்கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். அர்ச்சனா படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  போடி கீழத்தெருவை சேர்ந்தவர் கணேசன் (38). இவர் குரங்கணி பிச்சாங்கரையில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

  நேற்று மோட்டார் சைக்கிளில் போடி-முந்தல் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த ஜீப் பைக் மீது மோதியது. இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  ஜீப்பில் வந்த பானுமதி, மஞ்சுளா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த 2 சம்பவங்கள் குறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×