என் மலர்

  நீங்கள் தேடியது "2 people died"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கல் உடைக்கும் தொழில் செய்து வந்தனர்
  • போலீசார் விசாரணை

  வேலூர்:

  வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த கோரந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 34). கட்டிட தொழிலாளி. தர்மபுரி மாவட்டம் சாமி ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜி (42) கல் உடைக்கும் வேலை செய்து வந்தார். இவர்கள் 2 பேரும் பைக்கில் நேற்று மாலை கோரந்தாங்கள் பகுதியில் இருந்து திருவலம் நோக்கி காட்பாடி திருவலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

  அப்போது செம்பராயநல்லூர் அருகே வந்தபோது அரக்கோணத்தில் இருந்து திருவலம் வழியாக காட்பாடி நோக்கி சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக அவர்கள் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற மகேந்திரன், ராஜி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

  இது குறித்து தகவல் அறிந்ததும் திருவலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அவ்வழியாக வந்த டிப்பர் லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
  • இந்த 2 சம்பவங்கள் குறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மேலசொக்கநாதபுரம்:

  தேனி அருகே வீரபாண்டியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (வயது24). இவர் அர்ச்சனா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் போடி மெட்டு காத்தாடி பாறை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

  தாமரைக்கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். அர்ச்சனா படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  போடி கீழத்தெருவை சேர்ந்தவர் கணேசன் (38). இவர் குரங்கணி பிச்சாங்கரையில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

  நேற்று மோட்டார் சைக்கிளில் போடி-முந்தல் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த ஜீப் பைக் மீது மோதியது. இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  ஜீப்பில் வந்த பானுமதி, மஞ்சுளா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த 2 சம்பவங்கள் குறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராமநாதன், ராஜகுரு நேற்று கட்டுமாவடி-அறந்தாங்கி சாலையில் நாகுடி அருகே இருசக்கர வாகனத்தில் வேலை காரணமாக அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
  • அரசு வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது

  புதுக்கோட்டை :

  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த கம்பசேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமநாதன் (வயது 26) தனியார் பேருந்து நடத்துனர், ராஜகுரு (23) கூலி தொழிலாளி. இவர்கள் நேற்று கட்டுமாவடி-அறந்தாங்கி சாலையில் நாகுடி அருகே தங்களது இருசக்கர வாகனத்தில் வேலை காரணமாக அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

  அப்போது அவ்வழியாக திருச்சியில் இருந்து மணமேல்குடி நோக்கி சென்று கொண்டிருந்த சுகாதாரத்துறைக்கு சொந்தமான அரசு வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ராமு, ராஜகுரு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நாகுடி போலீசார் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதையடுதுது சம்பவ இடத்திற்கு விரைந்த துறை அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்தனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உறவினர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பைக் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
  • போலீசார் கார் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

  குள்ளனம்பட்டி:

  சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சந்தானம் (வயது42), ராஜா (35), பிரகாஷ் (30), இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் மாவட்டம் கன்னியாபுரம் அருகே உள்ள குளத்தில் நடந்த மீன்பிடி திருவிழாவில் பங்கேற்பதற்காக வந்தனர்.

  ஒத்தக்கடை அருகில் எஸ்.கொடை பிரிவு பகுதியில் வந்தபோது சாணார்பட்டி யில் இருந்து மதுரை அழகர் கோவில் நோக்கி சென்ற கார் பயங்கரமாக மோதியது.

  இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சந்தானம் மற்றும் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த பிரகாஷ் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

  இந்த சம்பவம் குறித்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியாண்டி தலைமையில் சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி மற்றும் போலீசார் கார் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர். மீன்பிடி திருவிழாவுக்கு வந்தவர்கள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திண்டுக்கல் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  குள்ளனம்பட்டி:

  திண்டுக்கல் அருகில் உள்ள மாலப்பட்டி காமாட்சிநகரை சேர்ந்தவர் சுப்பையா(74). இவர் ரெயில்வே பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

  சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் மாலப்பட்டி ரோட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து படுகா யமடைந்தார்.

  மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  திண்டுக்கல் மாவட்டம் சுள்ளெறும்பு நால்ரோடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(60). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

  மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அடையாளம் தெரியவில்லை
  • போலீசார் விசாரணை

  ஜோலார்பேட்டை:

  குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே சுமார் 25 வயது தக்க வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

  ரெயில் மோதியது

  அப்போது அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு வாலிபர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதுகுறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலிஷ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலிசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என குறித்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் இறந்தவர் மா நிறம் உடையவர் நீல கலர் ஜீன்ஸ் பேண்ட் லைட் பச்சை கலர் ஷர்ட் அணிந்துள்ளார்.

  2 பேர் பலி

  மேலும் அதேபோல வளத்தூர் ரெயில் நிலையம் அருகே சுமார் 45 வயது தக்கவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  இறந்தவர் மாநிறம் உடையவர் இவர் நீல கலர் லுங்கி அணிந்துள்ளார். அவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  பெரியகுளம்:

  போடி எடமுத்துநாயக்கர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது40). இவர் சற்று மனநலம் பாதிக்கப்ப–ட்டதால் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

  அங்கு கழிவறை ஜன்னலில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் கருணாநிதி (23). டிரைவராக வேலை பார்த்து வந்தார்.கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து சுற்றி திரிந்ததால் அவரது தாயார் கண்டித்தார்.

  இதனால் மனமுடைந்த கருணாநிதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திண்டுக்கல் ஆத்தூர் அணையில் மூழ்கி கடந்த 2 ஆண்டில் 9 பேர் பலியாகி உள்ளனர்
  • அணையில் பாதுகாப்பை மேம்படுத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்

  செம்பட்டி :

  திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர் பூஞ்சோலையை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது35). இவர்ஆத்தூர் (கிழக்கு) தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். மேலும் சித்த மருந்து விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி (30) என்ற மனைவியும் ராகுல் (8) முகேஷ் (5) ஆகிய மகன்களும் உள்ளனர்.

  கடந்த வாரம் ஆத்தூர் பூஞ்சோலையில் கோவில் திருவிழா நடைபெற்றது. இவருடைய அண்ணன் வேல்முருகன் மகள் தர்ஷினி (15) பெரியகுளத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவரும் திருவிழாவை காண வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று செல்வகுமார் நண்பர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ரவி என்பவருடைய மனைவி நாகேஸ்வரி இவரது தாயார் மற்றும் 2 குழந்தைகள், செல்வகுமார் வீட்டிற்கு வந்துள்ளனர்.

  பின்னர், இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் ஆத்தூர் காமராஜர் அணைக்கு குளிக்க சென்றனர். அப்போது, நண்பர் ரவியின் மனைவி நாகேஸ்வரி திடீரென நீரில் மூழ்கினார். இதைப்பார்த்த செல்வகுமார் அவரை காப்பாற்ற முயன்றார்.

  இதில் நாகேஸ்வரி காப்பாற்றப்பட்டார். அப்போது செல்வகுமார் மூழ்கி உயிருக்கு போராடி னார். அவரை காப்பாற்ற அவருடைய அண்ணன் மகள் தர்ஷினி நீரில் நீந்தி சென்று செல்வகுமாரை காப்பாற்ற முயன்றார். அப்போது, செல்வகுமார் மற்றும் தர்ஷினி ஆகிய 2 பேரும் நீரில் மூழ்கி சம்பவ இடத்தில் பலியானார்கள்.

  தகவலறிந்த ஆத்தூர் தீயணைப்பு படையினர் அங்கு சென்று நீரில் மூழ்கி பலியான செல்வகுமார் மற்றும் தர்ஷினி உடலை மீட்டு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுகுறித்து செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கடந்த 2 ஆண்டில் 9 பேர் ஆத்தூர் அணையில் குளிக்க சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். எனவே பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும், அறிப்பு பலகை வைத்து போலீசார் ஒருவரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  ×