முதியவர் உள்பட 2 பேர் பலி

சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்கல்லூரி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
முதியவர் உள்பட 2 பேர் பலி
Published on

 கோவை,

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சின்ன தொட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் முருகவேல் (வயது 71).

சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சிறுமுகை - சாஸ்திரி நகர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ரோட்டை திடீரென மூதாட்டி ஒருவர் கடக்க முயன்றார். அப்போது மொபட் மூதாட்டி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி முருகவேல் மொபட்டில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். மூதாட்டியும் காயத்துடன் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் முருகவேலை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், மூதாட்டியை மேட்டுப்பாைளயம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.ஆனால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற முருகவேல் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இடையர்பாளையம் அருகே உள்ள அன்பு நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (55). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் காளப்பநாயக்கன் சந்திப்பு அருகே சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற தனியார் கல்லூரி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com