போடி அருகே பைக் விபத்தில் முதியவர் உள்பட 2 பேர் பலி

பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டவர் போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த மற்றொருவரை போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் அங்கு உயிரிழந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரம் தெற்கு ஆசாரி தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது80). போடி விஸ்வாசபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (35). இவர் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தார்.

போடி-மீனாட்சிபுரம் சாலையில் ேமாட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடந்து சென்ற பொன்னுச்சாமி மீது பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பொன்னுச்சாமி போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் கணேசனும் காயம் அடைந்து டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com