என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
உத்தமபாளையம் அருகே பைக் விபத்தில் தேங்காய் வியாபாரி உள்பட 2 பேர் பலி
- பைக் விபத்தில் வியாபாரி மற்றும் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- இரு விபத்துகள் குறித்தும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியை சேர்ந்தவர் அழகர்(34). தேங்காய் வியாபாரி. சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு செல்வதாக வீட்டில் கூறிச்சென்றார். உ.புதூர் கடல்பாசி பங்களா ஓணி பிரிவு பகுதியில் சென்றபோது நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் மோதினார்.
இதில் தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போடி அருகே மேலசொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் பால் வைரமுத்து மனைவி பாண்டீஸ்வரி(24). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ராயப்பன்பட்டி-சுருளி தீர்த்தம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நிலைதடுமாறி வேகத்தடையில் ஏறியபோது பைக்கில் இருந்து தவறிவிழுந்த பாண்டீஸ்வரி படுகாயமடைந்தார்.
தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






