மோட்டார் சைக்கிளில் இருந்து கீேழ விழுந்த 2 பேர் பலி

ரோட்டின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. மொபட் கட்டுபாட்டை இழந்து கீழே விழுந்தார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து கீேழ விழுந்த 2 பேர் பலி
Published on

கோவை,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள காரி கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரவி (வயது 44). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் காரியம்பாளையம் - காரமடை ரோட்டில் சென்றார். அப்போது திடீரென மொபட் கட்டுபாட்டை இழந்து கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய ரவியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கிணத்துக்கடவு அருகே உள்ள டி.வி.கே. வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (62). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவை - பொள்ளாச்சி ரோட்டில் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கிருஷ்ணகுமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கிருஷ்ணகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com