search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100th Test"

    • தர்மசாலாவில் இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் ஐந்தாவது ஆட்டம் பேர்ஸ்டோவின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும்.
    • என்னுடைய 100வது டெஸ்ட் கேப்-ஐ எனது தாய்க்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். வலிமைக்கு ஒரு உருவம் இருந்தால் அது அவர்தான்.

    இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தர்மசாலாவில் இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் ஐந்தாவது ஆட்டம் இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோவின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும்.

    இந்நிலையில், ஜானி பேர்ஸ்டோ தனது 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பேர்ஸ்டோ,"100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது மிகவும் பெரிய விஷயம். என்னுடைய 100வது டெஸ்ட் கேப்-ஐ எனது தாய்க்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். வலிமைக்கு ஒரு உருவம் இருந்தால் அது அவர்தான். எனது தந்தை இறக்கும்போது 10 வயதுக்குட்பட்ட 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு 3 இடங்களில் பணிபுரிந்து எங்களை வளர்த்தார். அவர் இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அப்போதும் எனது அம்மா வலிமையாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.

    தரம்சாலா டெஸ்ட் போட்டி இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கும் 100வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 5 டெஸ்ட் கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் தொடரை இந்தியா ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது 

    • ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 4-வது இடத்தில் உள்ளார்.
    • இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 32 சதங்கள் மற்றும் 37 அரை சதங்கள் விளாசியுள்ளார்.

    ஹெட்டிங்லி:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடிவருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்று 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் புதிய சாதனை படைத்துள்ளார். அவர் இன்று தனது 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். கடந்த வாரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்து அசத்தினார்.

    34 வயதான ஸ்மித், கடந்த 2010-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை மொத்தம் 99 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 9,113 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 32 சதங்கள் மற்றும் 37 அரை சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 239 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 4-வது இடத்தில் உள்ளார். 

    • தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 பேட்ஸ்மேன்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • இந்த பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரராக சுனில் கவாஸ்கர் 4-வது இடத்தில் உள்ளது.

    ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் படைத்துள்ளார்.

    தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்தவர்கள் பட்டியலில் 5 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இடம் பிடித்த நிலையில் 6-வது வீரராக லாதன் லயன் பந்து வீச்சாளராக இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரராக சுனில் கவாஸ்கர் 4-வது இடத்தில் உள்ளது.

    தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள்:-

    159 - அலஸ்டர் குக்

    153 - ஆலன் பார்டர்

    107 - மார்க் வாக்

    106 - சுனில் கவாஸ்கர்

    101 - பிரண்டன் மெக்கல்லம்

    100* - நாதன் லயன்

    ×