என் மலர்

  நீங்கள் தேடியது "எம்பி"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொதுக்கூட்டம் ஒன்றில் முதல்வர், அமைச்சர்கள் பற்றி அவதூறாக பேசியதாக திமுக எம்.பி ஆர்.எஸ் பாரதி, எம்.எல்.ஏ கார்த்திக் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #DMK #ADMK
  கோவை:

  கடந்த 26-ம் தேதி கோயம்பத்தூர் மாவட்டம் பேரூரில் நடந்த திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை எம்பியுமான ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். மேலும், அக்கட்சி எம்.எல்.ஏ கார்த்திக், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டு தமிழக அரசை விமர்சித்து பேசினர்.

  இந்நிலையில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதாக ஆர்.எஸ் பாரதி, கார்த்திக், ராமச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது பேரூர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா தலைமையில் இந்தியா வந்துள்ள எம்.பி.க்கள் குழு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயர் சுமித்ரா மகாஜன் ஆகியோரை சந்தித்துள்ளனர். #Srilanka #India
  புதுடெல்லி:

  இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா, எதிர்க்கட்சி தலைவர் ஆர் சம்பந்தன் உள்பட 11 எம்.பி.க்கள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். டெல்லியில் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரை சந்தித்து அவர்கள் பேசினர்.

  பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது இலங்கை வடக்கு, கிழக்கு மாகாண தமிழர்கள் விவகாரம் தொடர்பாக பேசப்பட்டது. 13வது அரசியல் சாசன திருத்தம் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாஜக முன்னாள் எம்.பி தருண் விஜயின் ட்விட்டர் கணக்கில் இருந்து நேற்றிரவு மோடியை விமர்சித்து ட்வீட் போடப்பட்ட நிலையில், தனது அட்மின் மீது அவர் போலீசில் புகாரளித்துள்ளார். #TarunVijay
  டேராடூன்:

  பாஜக முன்னாள் எம்.பி தருண் விஜயின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் நேற்று, ராகுல் காந்தியின் கைலாஷ் யாத்திரையை ஆதரித்து முதலில் ட்வீட்கள் இடப்பட்டன. இந்த ட்வீட்கள் அனைவராலும் பகிரப்பட்டன. சிறிது நேரத்திற்கு பின்னர் மோடியை நேரடியாக விமர்சித்து ட்வீட்கள் வெளியானது.

  இதனால், பலரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவரது கணக்கு தற்காலிகமாக முடங்கி சிறிது நேரத்திற்கு பின் சரியானது. சர்ச்சைக்குரிய ட்வீட்கள் நீக்கப்பட்டிருந்தன.   “2019ம் ஆண்டு வரப்போகும் தேர்தல்களை முன்னொட்டியே இது போன்ற விரோத மனப்போக்குடன் செயல்பட்டு வருகிறார்கள்” என்று வருத்தத்தினை பதிவு செய்துள்ள தருண் விஜய், “நானும் என் குடும்பத்தினரும் வாழ்நாள் முழுவதும் பாஜகவிற்கும், மோடி மற்றும் அமித் ஷாவிற்கும் கடமைப்பட்டவர்கள். காலை முதல் இரவு வரை அவர்களுக்காகவே நாங்கள் பணியாற்றி வருகிறோம். இது போன்ற இக்கட்டான நிலையில் என்னை நம்பிய, எனக்கு உறுதுணையாய் செயல்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி” என கூறி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டார்.

  “நேற்று பத்து மணியில் இருந்து பதிவு செய்த ட்விட்டர் பதிவுகள் அனைத்தையும் நீக்கி, புதிய கடவுச்சொல்லினை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்” என குறிப்பிட்ட அவர் தன் அட்மின் மீது போலீசில் புகார் அளித்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், யுஜிசி மசோதா மற்றும் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்க்குமாறு அதிமுக எம்.பி.க்களுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவுறுத்தியுள்ளனர். #MansoonSession #ADMK
  சென்னை:

  பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. நிலுவையில் உள்ள மசோதாக்களோடு பல்கலைக்கழக மானியக்குழுவை கலத்து புதிய அமைப்பை ஏற்படுத்தும் யுஜிசி மசோதா மற்றும் அணை பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட புதிய மசோதாக்களை நிறைவேற்ர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

  இந்நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடரை எதிர்கொள்வது குறித்து அதிமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், எம்.பி.க்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

  மேலும், யுஜிசி மசோதா மற்றும் அணை பாதுகாப்பு மசோதா ஆகியவற்றை எதிர்க்குமாறு எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த இரண்டு மசோதாக்களை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிஜு தனதா தளம் கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மக்களவை உறுப்பினர் பைஜயந்த் பாண்டா தனது பதவியை ராஜினாமா செய்வதாக மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
  புபனேஷ்வர்:

  ஒடிசா மாநிலம் கேந்த்ரபாரா மக்களவை தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பைஜயந்த் பாண்டா. பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பாண்டா சமீபத்தில் கட்சிக்கு விரோதமாக கருத்து கூறியதால், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளானார். இதன் பின்னர், கட்சியை விட்டு பாண்டா விலகினார்.

  அவர் பாஜகவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக மக்களவை சபாநாயகருக்கு பாண்டா இன்று கடிதம் எழுதியுள்ளார். எனினும், அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வது குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை. 
  ×