என் மலர்
உலகம்
- வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, முதலில் சற்று பின்னடைவை சந்தித்தாலும் 1½ லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- அண்டை நாடுகளான மொரீஷியஸ் மற்றும் பூடான் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜனதா மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது.
வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, முதலில் சற்று பின்னடைவை சந்தித்தாலும் 1½ லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அணி 296 இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.
இதையடுத்து பிரதமர் மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அண்டை நாடுகளான மொரீஷியஸ் மற்றும் பூடான் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு ஆகியோர் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தனது எக்ஸ் தளத்தில்,
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு என் அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் தலைமையில் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு வழி வகுத்தது.
நெருங்கிய அண்டை நாடான இலங்கை இந்தியாவுடனான கூட்டுறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா தனது எக்ஸ் தளத்தில்,
பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்.
இந்திய மக்களின் உற்சாகமான பங்கேற்புடன் உலகின் மிகப்பெரிய ஜனநாயக பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததைக் குறிப்பிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது எக்ஸ் தளத்தில்,
இத்தாலிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
வாழ்த்து தெரிவித்துள்ள உலகத்தலைவர்களுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
- கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாபோய்ங் மாலில் இருந்து வெளியே வரும்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
- ஜன நடமாட்டம் நிறைந்த பொது சாலையில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சமபவம் சர்ச்சையாகியுள்ளது .
மெக்சிகோவில் புதிய அதிபர் பதியேற்ற ஒரு நாளுக்குள் பெண் மேயர் நடுரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லத்தீன் அமெரிக்காவிலேயே முதல் முறையாக பெண் ஒருவர் அதிபராக மெக்சிகோவில் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் இடதுசாரி அரசியல்வாதியும் முன்னாள் மேயருமான கிலவ்டியா செயின்பவும் மெக்சிகோ அதிபாராக தேர்வான 24 மணி நேரத்துக்குள் கோட்டிஜா நகர பெண் மேயரான யோலாண்டோ சான்செஸ் ஜன நடமாட்டம் நிறைந்த பொது சாலையில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சமபவம் சர்ச்சையாகியுள்ளது .

கடந்த 2021 மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற சான்செஸ் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாபோய்ங் மாலில் இருந்து வெளியே வரும்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். 3 நாட்கள் கழித்து அவர் மீட்கப்பட்டதாக மெக்சிகோ அரசாங்கம் தெரிவித்தது. இந்நிலையில் நேற்று (ஜூன் 4) அவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதற்கிடையில் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருவதாக அரசு தரிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த வாரம் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
- டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 77). குடியரசு கட்சி தலைவரான இவர் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் அங்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இதனை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே கடந்த வாரம் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்தநிலையில் சீன செயலியான டிக் டாக்கில் டிரம்ப் புதிய கணக்கு துவங்கினார். அவரை டிக் டாக்கில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இவர் ஜனாதிபதியாக இருந்தபோது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.
இந்தநிலையில் தற்போது அவரே டிக் டாக்கில் இணைந்துள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் தேர்தல் பிரசார உத்திக்காக டிக் டாக்கில் இணைந்து இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
- இஸ்ரேல் மூன்று வகையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முன்வைத்துள்ளது.
- போர் நிறுத்தத்திற்கான நேரம் இது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு.
இஸ்ரேல் காசா மீது நடத்தும் தாக்குதலை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ரஃபா மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ராணுவம் மூன்று வடிவிலான போர் நிறுத்தத்தை முன்வைத்துள்ளதாக ஜோ பைடன் தெரிவித்திருந்தார். மேலும், போரை நிறுத்துவதற்கான நேரம் இது. இஸ்ரேல் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதற்கான திறன் ஹமாஸிடம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். இதனால் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஞாயிறு நள்ளிரவும் மற்றும் திங்கட்கிழமை காலையில் மத்திய காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பெண் ஒருவர், மூன்று குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை நள்ளிரவு புரைஜி முகாம் அருகில் உள்ள வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். நுசெய்ரத் முகாமில் தாக்குதப்பட்ட தாக்குதலில் பெண் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி கடத்தி செல்லப்பட்டதாக கருதப்படும் பிணைக்கைதிகளில் ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
காசாவில் மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள ரஃபா நகரின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் உணவு, மருத்துவ வசதி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
காசா மீது நடத்தப்படும் தாக்குதலில் இதுவரை 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர். 250 பேரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றது.
- லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- புத்தாண்டு அட்டைகளும், உணர்வுபூர்வமான கடிதங்களும் ஏலத்திற்கு வருகிறது.
இளவரசி டயானா தனது முன்னாள் வீட்டு பணியாளர் மவுட் பென்ட்ரேவுக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் விடுமுறை வாழ்த்து அட்டைகள் வருகிற 27-ந் தேதி ஏலம் விடப்பட உள்ளன.
1981-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரையிலான 14 கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அட்டைகளும் பல உணர்வுபூர்வமான கடிதங்களும் இந்த ஏலத்திற்கு வருகிறது.
இளவரசர் சார்லசை மணந்த பிறகு அவர்கள் எழுதிக் கொண்ட கடிதங்களும் இதில் அடங்கும். பெவர்லி ஹில்சில் உள்ள ஜூலியன்ஸ் ஏல நிறுவனத்தால் இந்த ஏலம் நடத்தப்பட உள்ளது.இதில் 1982-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி எழுதப்பட்ட ஒரு கடிதம் இளவரசர் சார்லசுடன் அவரது தேனிலவு பயணத்தின் மகிழ்ச்சியை குறிப்பிடுகிறது.
இதே போல ஒரு கடிதத்தில், தாய்மை உணர்வில் மகிழ்ச்சி அடைந்த டயானா, இளவரசர் வில்லியம் பிறந்த பிறகு தன்னை மிகவும் பெருமைப்படக்கூடிய மற்றும் அதிர்ஷ்டசாலியான தாய் என்று விவரிக்கிறார். மேலும் குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கான தனது ஆர்வத்தையும் அதில் வெளிப்படுத்தி உள்ளார்.
1983-ம் ஆண்டு ஹெலிகாப்டரில் இருந்து கையசைத்து விடைபெற்ற விதத்தை அவர் விவரிக்கும் 2 பக்க கடிதங்கள் டயானாவின் இயல்பான தன்மையை வெளிப்படுத்துகிறது.
டயானாவின் கையால் எழுதப்பட்ட செய்திகள், அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் சிறந்த தருணங்கள் மற்றும் மைல்கற்களை இந்த கடிதங்கள் வெளிப்படுத்தும் என்பதால் இவை ஏலத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கலைஞர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் வகையில் கலைஞரின் புகைப்படம் பிரதிபலிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
மறைந்த தி.மு.க தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் வழிவந்த அண்ணாவின் திராவிட அரசியலை 1969 இல் அவரது மறைவுக்குப் பின் தமிழகத்தில் தீவிரமாக முன்னெடுத்துச் சென்ற கலைஞர் கருணாநிதி பழமைவாதத்தை வேரறுக்கும் பல மகத்தான திட்டங்களை கொண்டுவந்தவர் ஆவார்.
கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டங்களை கொண்டுவந்தது, எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நிறுவியது, இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்தினருக்கும் சம உரிமை கிடைக்க வழிவகை செய்தது, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தது, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அளித்தது, விதவைகளுக்கு மறுமண உதவித் திட்டங்களை அளித்தது, கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க நிதியுதவி அளித்தது என கலைஞர் கொண்டுவந்த திட்டங்களின் பட்டியல் நீளும்.

குமரிக்கடலில் திருவள்ளுவர் சிலையை நிறுவி உலக செம்மொழி மாநாட்டை நடத்திக்காட்டினார். கலைஞரின் சாதனைகளுக்காக இன்றளவும் அவர் நினைவுகூறப்டும் நிலையில் அவரின் 101 வது பிறந்தநாளை திமுக தொண்டர்களும் அவரது அபிமானிகளும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் நியூ யார்க் தமிழ் சங்கத் தலைவருமான கதிர்வேல் குமாரராஜா தனது குடும்பத்துடன் சேர்ந்து கலைஞருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது காசை செலவுசெய்து, நியூ யார்க் டைம்ஸ் சதுக்கத்தில் முழு அளவிலான விளம்பரப் பலகையில் கலைஞரின் புகைப்படத்தை இடம்பெறச் செய்துள்ளார். அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கதிர்வேல் ராஜாவின் குடும்பத்தினர் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் வகையில் கலைஞரின் புகைப்படம் பிரதிபலிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- வடகொரியாவின் இந்த செயல் மனிதாபிமானமற்றது.
- இந்த செயலை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியது.
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகை மேற்கொள்ளும்போது, இவ்வாறு ஏவுகணைகளை செலுத்து தென்கொரியாவை எச்சரிக்கை விடுப்பது வழக்கம்.
அந்த வகையில், கடந்த சில நாட்களாக ராட்சத பலூன்கள் முழுக்க குப்பைகளை கட்டி அவற்றை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வைத்தது. இருநாட்டு எல்லையில் அமைந்துள்ள தென்கொரிய பகுதிகளுக்குள் ஏராளமான பலூன்கள் இவ்வாறு பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த பலூன்களில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில், ஷூ பகுதிகள், சாணம், சிகரெட் துண்டுகள் இடம்பெற்று இருந்தன. வடகொரியாவின் இந்த செயல் மனிதாபிமானமற்றது என்றும் மிகவும் தரம்தாழ்ந்த ஒன்று என தென்கொரியா தெரிவித்தது. மேலும், வடகொரியாவின் இந்த செயலை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்தியது.
இந்த நிலையில், வடகொரியா துணை பாதுகாப்பு துறை அமைச்சர் கிம் காங் II, "எல்லைப்பகுதியில் ராட்சத பலூன்களில் குப்பை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துகிறோம். குப்பைகளை சுத்தம் செய்ய எவ்வளவு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது, இப்படி குப்பைகளை கொட்டினால் எப்படி இருக்கும் என்பதை தென் கொரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்," தெரிவித்தார்.
தென் கொரியா சார்பில் நீண்ட காலமாக பலூன்கள் அனுப்பப்பட்டு வருவதற்காகவே இவ்வாறு பலூன்கள் அனுப்பப்பட்டன என்று கிம் காங் II தெரிவித்தார்.
- மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியாளர்கள் உடனே வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- கடந்த காலங்களிலும் இஸ்ரேல் மீது மலாத்தீவு தடைகளை விதித்துள்ளது.
தீவு நாடான மாலத்தீவில் இஸ்ரேல் குடிமக்கள் நுழைய தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அறிவித்துள்ளார். பாலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட இதுவரை 36,439 மக்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மே 27 ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பொதுமக்கள் கொள்ளப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

முன்னதாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் அதை தனி நாடாக அங்கீகரித்தன. ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் பாலஸ்தீனத்தில் மீண்டும் அமைதி நிலவ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு அளித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் சமயத்தில் போர் நிறுத்தத்த்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு அழைப்பு விடுத்துள்ளளார். இந்த நிலையில்தான் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாலத்தீவு இஸ்ரேல் குடிமகன்கள் மாலத்தீவுக்குள் நுழைய தடை விதித்துள்ளது.

இதைத்தொடர்ந்து மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியாளர்கள் உடனே வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதையும் மீறி இங்குள்ள இஸ்ரேலியர்களுக்கு ஏதேனும் அசமபாவித்தம் நிகழ்ந்தால் அவர்களுக்கு அரசு உதவி செய்வதில் சிக்கல் ஏற்படும் என்று என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசானது மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியர்கள் உடனே நாடு திரும்பும்படி அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுலாவுக்கு பெயர் போன மாலத்தீவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சூழலில் இந்த அறிவிப்பானது அதன் பொருளாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களிலும் இஸ்ரேல் மீது மலாத்தீவு தடைகளை விதித்துள்ளது.இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை தீவிரமாக நடந்து வந்த 1990 களில் மாலத்தீவில் இஸ்ரேலியர்களுக்கு தடைவிதிக்கபப்ட்டு, பின் 2010 இல் அதனை நீக்கி இஸ்ரேலுடன் அரசாங்க உறவுகளை மீண்டும் மாலத்தீவு புதுப்பித்தது குறிப்பிடத்தக்கது.
- ஊடகத்துறையில் புகழ்பெற்றவர் ரூபர்ட் முர்டாக். கடந்த ஆண்டு இவர் ஃபாக்ஸ் அண்ட் நியூஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து வெளியேறினார்.
- இந்த முறை எலினா சுகோவா- வை ரூபெர்ட் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஊடகத்துறையில் புகழ்பெற்றவர் ரூபர்ட் முர்டாக். கடந்த ஆண்டு இவர் ஃபாக்ஸ் அண்ட் நியூஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து வெளியேறினார். ஊடகத்துறையில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரூபெர்ட் கடந்த சனிக்கிழமை 5- வது முறையாக திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த முறை எலினா சுகோவா- வை ரூபெர்ட் திருமணம் செய்து கொண்டுள்ளார். ரூபெர்ட் மற்றும் எலினாவின் திருமணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மொராகா வைன் யார்ட் எஸ்டேட்டில் நடைபெற்றது. ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொண்ட ரூபெர்ட் முர்டாக்கிற்கு வயது 93 ஆகும்.
இவர் தற்போது திருமணம் செய்து கொண்ட சுகோவாவிற்கு 67 வயது ஆகிறது. சுகோவா அழகிய ஆங்கில் லெந்த் கவுனை அணிந்து இருந்தார், மணமகன் முர்டாக் கருப்பு நிறகோட் சூட் அணிந்திருந்தார்.
இவர்கள் திருமண விழாவில் நியூ இங்கிலாந்து பாட்ரியாட்டின் உரிமையாளரான ராபர்ட் கே கிராஃப்ட் மற்றும் நியூஸ் கார்ப்பரேஷனின் சி.இ.ஓ.-வான ராபர்ட் தாமஸ் கலந்துக் கொண்டனர். சுகோவா ஒரு ஓய்வு பெற்ற மாலிக்யுலர் பயாலஜிஸ்ட் ஆவார்.

இதற்கு முன் சுகோவா பில்லியனர் எனர்ஜி இன்வஸ்டரான சுகோவை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காதலிப்பதும், கல்யாணம் செய்துக் கொள்வதற்கும் வயது வரம்பே இல்லை என்பதை இந்த ஜோடி நிருப்பித்துள்ளனது.
- கடந்த 2023 ஜனவரி மாதம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியாகி அந்நிறுவனத்துக்கு சறுக்கலை ஏற்படுத்தியது.
- வர்த்தகத்தில் அதானியின் பங்குகளின் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை (மே 31) 14 சதவீதம் வரை அதிகரித்துள்ளது
இந்தியாவின் பெரும் பணக்காரர்களான கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரின் நிறுவனங்கள் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. இதற்கிடையே பணக்காரர்கள் பட்டியலில் இருவரில் யார் முந்துகிறார்கள் என்ற போட்டி ஆரம்பம் முதலே நிலவி வருகிறது.

அந்த வகையில் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கவுதம் அதானி மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு உலக பொருளாதாரம் சரிவில் இருந்த சமயத்தில் அதானியின் நிறுவனம் அதிக லாபத்தை சேர்த்துக் குவித்ததால் அவர் ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.
ஆனால் கடந்த 2023 ஜனவரி மாதம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியாகி அந்நிறுவனத்துக்கு சறுக்கலை ஏற்படுத்தியது. இந்திய அரசியலிலும் ஹிண்டன்பெர்க் அறிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் அதானி குழுமத்தின் விமான சேவை வர்த்தகம் குறிப்பிடத்தக்க வகையில் லாபம் ஈட்டியுள்ளது.

இதன்காரணமாக வர்த்தகத்தில் அதானியின் பங்குகளின் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை (மே 31) 14 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால் ப்ளூம்பெர்க் கறிக்கையின்படி, உலக பணக்காரர்கள் பட்டியலில் 12 ஆவது இடத்துக்கு அம்பானியை பின்னுக்குத் தள்ளி அதானி 11 ஆவது இடத்தைப் பிடித்துள்ளள்ளார். தற்போதைய நிலவரப்படி முறையே கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 111 பில்லியன் டாலராகவும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 109 பில்லியன் டாலராகவும் உள்ளது.

- அசாத்திய சாகசங்கள் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தன.
- நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
போர்ச்சுகல் நாட்டின் தெற்கில் உள்ள பெஜா விமான நிலையத்தில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான ராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பங்கேற்று அசாத்திய சாகசங்கள் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தன.
நடுவானில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அடுத்தடுத்து சாகசங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், இரு சிறிய ரக விமானங்கள் மோதிக் கொண்டதால் விமான சாகச நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.
இரு விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட சம்பவம் அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு விமானி அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர்தப்பினார். இது குறித்து விமான படை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "பெஜா விமான சாகச நிகழ்ச்சியில் இரு விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட சம்பவம் அரங்கேறியதை விமான படை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம்.
- இஸ்ரேல் ராணுவத் தளம் மீது ராக்கெட்டுகள் வீசி தாக்குதல்.
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேல் போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் உள்ளது.
அந்த இயக்கத்தினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் ஆளில்லா விமானத்தை(டிரோன்) சுட்டு வீழ்த்தியதாக ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும் எல்லை நகரமான கிரியாத் ஷ்மோனாவில் உள்ள இஸ்ரேல் ராணுவத் தளம் மீது ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும் தெரிவித்தது.






